(Source: ECI/ABP News/ABP Majha)
Kitchen Tips: முட்டை, வெங்காயம் பிரெஷ் ஆக இருக்க.. சமையலறை பராமரிப்பு குறிப்புகள் இதோ!
Kitchen Tips: சமையலறை பராமரிப்பு குறித்து சில டிப்ஸ் இங்கே காணலாம்.
சமையலறையில் மேடையில் இடம் இருந்தால் அதன் மீது பயன்படுத்தும் உணவு பொருட்கள், தேவையான பொருட்கள் என வைப்பது வழக்கமானது இல்லையா? ஆனால், எல்லா பொருட்களும் மேடையில் வைக்க உகந்தது இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சில உணவு பொருட்களை அதன் மீது வைக்க கூடாது. அது உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போக காரணமாக அமைந்துவிடும் என்கிறார்கள். அது பற்றி விரிவாக காணலாம்.
முட்டை:
சமையலறை மேடையில் முட்டையை வைப்பது சரியானது அல்லது. அதிகமாக முட்டை வாங்கி ஸ்டோர் செய்வீர்கள் என்றால் மேடை மீது வைக்கவே கூடாது. வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக அதில் பாக்டீரியாக்கள் வளர்ந்துவிடும். தட்பவெப்பநிலை குறைவாக இருந்தால் பாக்டீரியாக்களுக்கு குஷிதான். அடுப்பிற்கு பக்கத்தில் முட்டையை வைக்க கூடாது. கூடான சூழலில் முட்டை இருப்பது எளிதாக கெட்டுவிட வாய்ப்புள்ளது. ஃப்ரிட்ஜில் முட்டையை வைப்பது பரிந்துரைக்கப்படுகிறது. பயன்பாட்டினைப் பொறுத்து 10 முட்டைகளுக்கு மேல் ஃபிரிட்ஜில் வைக்கலாம்.
பிரெட்:
காலையில் எளிதாக உணவு தயாரிக்க வேண்டும் என்றால் பிரெட், முட்டை இருந்தால் போதும். சாஃப்டான பிரெட் யாருக்குத்தான் பிடிக்காது. அவகாடோ டோஸ், முட்டை டோஸ்ட், பிரெஞ்ச் டோஸ்ட் என செய்யலாம். பிரெட் பிரெஷ் ஆக இருக்க அடுப்பிற்கு அருகில் வைக்க கூடாது. அதுவும் அடுப்பிற்கு அருகில் வைக்க கூடாது. காற்று புகாதா டப்பா அல்லது ஃபிரிட்ஜில் வைக்கலாம். பிரெட் வாங்கிய உடன் குறைந்த நாட்களில் அதை பயன்படுத்திவிடுவது நல்லது. தேவையான அளவு மட்டும் வாங்கி வைக்கலாம்.
வெங்காயம்:
சமையலறை மேடையில் குறிப்பாக அடுப்பிற்கு அருகில் வெங்காயம், பூண்டு, உள்ளிட்டவற்றை வைக்க கூடாது. அருகில் கூடையில் காற்றோட்டமாக வைக்கலாம். அடுப்பு சூடு இருல்லாத இடத்தில் வைப்பது பரிந்துரைக்கப்படுகிறது. இவற்றை தனியே ஷெல்பில் அல்லது சமையலறையில் வேறு இடத்தில் வைக்கலாம். அடுப்பிற்கு அருகில் வைப்பது வெங்காயம், பூண்டு ஆகியவை எளிதாக கெட்டுவிடும்.
தக்காளி:
தக்காளி இல்லாமல் சமையல் இல்லை. தக்காளியை ஃபிர்ட்ஜில் வைக்கலாம். மேடை மீது வைப்பது தக்காளி சீக்கிரம் அழுகிவிடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கில் ஸ்டார்ட் அதிகம் இருப்பதால் அதிக வெப்பம் கொண்ட இடங்களில் இவற்றை வைக்க கூடாது. அடுப்பிற்கு அருகில் வைக்க வேண்டாம். அதிக வெப்பம் குளிர் இல்லாத இடங்களில் மட்டுமே உருளைக்கிழங்கை வைக்க வேண்டும். வெளிக்கம் குறைந்த ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம். ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம்.