மேலும் அறிய

Wonder Jobs | இப்படியும் வேலை இருக்கா.. பேப்பர் போட்டுட்டு போயிடலாமா மச்சி மொமெண்ட்..!

உலகில் மிகவும் ஜாலியான வேலைகள் சில உள்ளன. அவை என்னென்ன? அதற்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பொதுவாக உன்னுடைய வேலையை ஜாலியாக செய்தால் உனக்கு ஓய்வு என்ற ஒன்று உனக்கு தேவையே இருக்காது என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம்.  எனினும் தினமும் 9-5 மணி வேலையை செய்வதால் நம்மில் பலருக்கு இந்த வாக்கியம் தவறு என்றே புரிதல் இருக்கிறது. ஆனால் அவர்கள் கூறியதுபோல ஒரு சில வேலைகள் இந்த உலகில் உள்ளன. அவற்றை செய்யும் போது உங்களுக்கு வேலை செய்கின்ற மாதிரி எந்த ஒரு சுமையோ வேலை பளுவோ இருக்காது. அந்த வேலைகள் அனைத்தும் கிட்டதட்ட நீங்கள் ஒரு வெக்கேஷனில் இருப்பதுபோல தோன்றும். அப்படி என்னடா வேலை.. உடனே சொல்லுங்க நாங்க எங்க வேலையை விட்டுட்டு அங்கே போறோம் என்றுதானே நினைக்கிறீர்கள். இதோ உங்களுக்காக அந்த வேலைகளின் பட்டியல் மற்றும் அவற்றில் கிடைக்கும் சம்பளங்களின் பட்டியல்:..

தீவு பராமரிப்பாளர்:

Wonder Jobs | இப்படியும் வேலை இருக்கா.. பேப்பர் போட்டுட்டு போயிடலாமா மச்சி மொமெண்ட்..!

இயற்கை எழில் சூழ அமைந்திருக்கும் தீவுகளை பராமரிப்பதற்கு என்றே சில வேலைகள் உள்ளன. அவை பெரும்பாலும் வெளிநாடுகளில் அதிகம் சம்பளம் அளிக்கப்படும் வேலைகளில் ஒன்று. ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிரேட் பாரியர் ரீஃப் தீவுகளில் இந்த வேலை உள்ளது. அங்கு உள்ள இயற்கை அழகை பராமரிப்பது, உள்ளூர் வாசிகளுடன் உரையாடுவது போன்ற மிகவும் எளிமையான வேலைகள் இதில் உள்ளன. இந்த வேலைக்கு இந்திய மதிப்பில் சராசரியா 2.19 கோடி ரூபாய் ஆண்டிற்கு சம்பளமாக கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. 

ப்ரொஃபஷ்னல் ஸ்லீப்பர்:

Wonder Jobs | இப்படியும் வேலை இருக்கா.. பேப்பர் போட்டுட்டு போயிடலாமா மச்சி மொமெண்ட்..!

இந்த பெயரை பார்த்தால் இது எதோ பெரிய வேலை என்று நினைப்பீர்கள். ஆனால் ஒன்றும் இல்லை தூங்கிக்கொண்டே இருப்பதுதான் இந்த வேலை. நீங்கள் தூங்குவதற்கு ஒருவர் காசு தருவார். அவ்வளவு எளிதாக நினைத்தவுடன் நம்மால் தூங்கமுடியாது. அதற்கு தான் இந்த சம்பளம். மேலும் தூங்கும்போது மனித உடல் குறித்து ஆராய்ச்சி, படுக்கை மெத்தைகள் ஆய்வு  உள்ளிட்டவை செய்வதற்காக உங்களைப் பயன்படுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கும் லாபம், நீங்களும் தூங்கலாம். இதற்கு ஆண்டு ஊதியம் 40 லட்சம் ரூபாய் வரை இருக்கும். 

வெகேஷன் Pro:

Wonder Jobs | இப்படியும் வேலை இருக்கா.. பேப்பர் போட்டுட்டு போயிடலாமா மச்சி மொமெண்ட்..!

இந்த வேலையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் நீங்கள் ஒரு இடத்திற்கு பயணம் செய்து அங்கு உள்ள இடங்கள் மற்றும் அவற்றின் வசதிகள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள வேண்டும். பின்னர் அதை வைத்து சுற்றுலா நிறுவனங்களில் பணிபுரிந்து பயணிகளுக்கு உதவியாக இருக்க வேண்டும். அதிகம் பயணத்தை விரும்புவோருக்கு இது மிகவும் ஏற்ற வேலை. இந்த வேலைக்கு சராசரியாக இந்திய மதிப்பில் 14 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் வகையில் வேலைகள் உள்ளன. அவை பெரும்பாலும் வெளிநாட்டில் உள்ள சுற்றுலா நிறுவனங்களில் கிடைக்கும். 

பீர் சுவைப்பவர்:

Wonder Jobs | இப்படியும் வேலை இருக்கா.. பேப்பர் போட்டுட்டு போயிடலாமா மச்சி மொமெண்ட்..!

வெளிநாட்டில் உள்ள பீர் கம்பெனிகள் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் பீர்களை ருசித்து பார்த்து அதன் சுவையை சொல்வதற்கு சிலரை வேலைக்கு எடுப்பார்கள். அந்த வேலையில் நீங்கள் செய்வது ஒன்றே ஒன்றுதான். பீரை குடித்துவிட்டு அது எப்படி இருக்கிறது என்று தெளிவாக கூறவேண்டும். இதில் உங்களுக்கு பீர்கள் தொடர்பான அறிவு அதிகம் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படும். இந்த வேலையில் ஆண்டிற்கு 35 லட்சம் ரூபாய் வரை வருமான கிடைக்கும். 

நெட்ஃபிளிக்ஸ் டேகர்:

Wonder Jobs | இப்படியும் வேலை இருக்கா.. பேப்பர் போட்டுட்டு போயிடலாமா மச்சி மொமெண்ட்..!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றை பார்த்து சரியான பிரிவுகளில் டேக் செய்ய வேண்டும். இது ஒரு பகுதி நேரவேலை. இந்த வேலைக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாரத்திற்கு 100 டாலர்கள் வரை கொடுக்கும். இது நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையார்களின் தேடல் மற்றும் எளிதாக பார்ப்பதற்கு உதவும் என்பதால் இது மிகவும் முக்கியமான வேலைகளில் ஒன்று. 

சாக்லேட்டைச் சுவைப்பவர்:

Wonder Jobs | இப்படியும் வேலை இருக்கா.. பேப்பர் போட்டுட்டு போயிடலாமா மச்சி மொமெண்ட்..!

சாக்லேட் தயாரிக்கும் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் சாக்லேட்களை சுவைத்து பார்த்து அதன் ருசியை கூறுவதற்கு சிலரை வேலைக்கு எடுப்பார்கள். இந்த வேலை மிகவும் எளிதான ஒன்றுதான். அனைவரும் சாக்லேட் பிடிக்கும் என்பதால் இதுவும் ஒரு நல்ல வேலையாக அமைந்துள்ளது. இந்த வேலைக்கு சராசரியக 43 லட்சம் ரூபாய் வரை ஆண்டிற்கு சம்பாதிக்க முடியும். 

நீர் விளையாட்டு சோதனையாளர்:

Wonder Jobs | இப்படியும் வேலை இருக்கா.. பேப்பர் போட்டுட்டு போயிடலாமா மச்சி மொமெண்ட்..!

நீர் விளையாட்டு தொடர்பான கேளிக்கை பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுகளில் நீங்கள் முதலில் விளையாடி பார்க்கவேண்டும். இது சற்று கடினமான வேலைதான். ஏனென்றால் கொஞ்சம் தவறு நடந்தாலும் அது உங்களுடைய உடல் அல்லது உயிரை பாதிக்கும். இந்த வேலைக்கு ஆண்டிற்கு 16 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். 

சாம்பி:

Wonder Jobs | இப்படியும் வேலை இருக்கா.. பேப்பர் போட்டுட்டு போயிடலாமா மச்சி மொமெண்ட்..!

இந்த வேலையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஸோம்பி போல் வேடம் அணிந்துகொண்டு மற்றவர்களை பயப்பட வைக்க வேண்டும். இது குறிப்பாக லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் செய்யப்படும். இந்த வேலைக்கு 8 மணிநேரத்திற்கு 4000 ரூபாய் வரை ஊதியமாக தரப்படுவது குறிப்பிடத்தக்கது. 

என்ன என்ன சொல்றாங்க பாருங்களேன்..

மேலும் படிக்க:”ஐஸ் பேபி.. இதுதான் சீக்ரெட்.. அற்புதம் பண்ணுது..” தமன்னா சொல்லும் முகப்பொலிவு மேஜிக்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக
ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Embed widget