பொறியியல் பட்டதாரிகளுக்கு ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை; செப்.19-க்குள் அப்ளை பண்ணுங்க..
ரைட்ஸ் நிறுவனத்தில் சேர விரும்பும் நபர்கள் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம் ( டிப்ளமோ) மற்றும் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் 40 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் பொறியியல் பட்டதாரிகள் செப்டம்பர் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனவத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம் ( டிப்ளமோ) மற்றும் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ரைட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான தகுதி மற்றும் சம்பள விபரங்கள்:
மத்திய அரசின் ரைட்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர விரும்பும் நபர்கள், பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்.சி தேர்ச்சியுடன் 6 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் டிப்ளமோ முடித்தவர்கள் 12 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது போன்ற தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட கல்வித்தகுதியும், பணி முன் அனுபவம் கொண்டவர்கள் ரைட்ஸ் நிறுவனத்தின் www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்த பிறகு, அவர்களுக்கு நேர்முகத்தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத்தேர்விற்கான அழைப்புக்கடிதம், மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் இவர்களுக்கான நேர்முகத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 27-ஆம் தேதியன்று கொச்சியில் உள்ள ரைட்ஸ் நிறுவன வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நேர்முகத் தேர்விற்கு வரும் நபர்கள் கட்டாயம் தங்களது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில் நேர்முகத்தேர்வில் தேர்ச்சிபெறும் விண்ணப்பத்தார்கள், ரைட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு தகுதி பெறுவார்கள். இதில் பொறியியல் பட்டதாரி பிரிவினருக்கு மாதம் ரூபாய். 22 ஆயிரத்து 353 மற்றும் (டிப்ளமோ) பட்டயம் பிரிவினருக்கு ரூபாய் 18,350 சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்வம் உள்ள இன்ஜினியரிங் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இப்பணிக்கு குறித்த கூடுதல் விபரங்களை அறிய http://www.rites.com/upload/career/vc_No_18_21_Engineer(civil)_pdf-2021-sep-08-16-8-13.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.