மேலும் அறிய

NDA & NA தேர்விற்கு இனி பெண்களும் விண்ணப்பிக்கலாம்.. இதுதான் வழிமுறை..!

தேசிய பாதுகாப்பு அகாடமியில் 370 பணியிடங்களையும், கடற்படை அகாடமியில் 30 பணியிடங்களையும் நிரப்புவதை நோக்கமாகக்கொண்டு இந்தாண்டு தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமியில் பெண்களைச்சேர்ப்பதற்கான விண்ணப்பப்படிவம் ஆன்லைனில் தொடங்கியது.

இந்தியாவில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் கடற்படை அகாடமியில் ஏன் இதுவரை பெண்கள் சேர்க்கப்படவில்லை, அவர்களும் அனைத்து விதமான திறமைகள் உள்ளது. எனவே பெண்களையும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் குஷ்கல்ரா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு, பாதுகாப்புப் படையில் பெண்களை சேர்க்க கொள்கைகள், வயது, பயிற்சியின் தன்மை, எத்தனை பேரை பணியில் நிரந்தரமாக நியமிப்பது, மருத்துவ ரீதியான தகுதிகள், அவர்களுக்கென்று தனியாக தங்கும் விடுதி, கழிப்பறை போன்றவை ஏற்படுத்த காலதாமதம் ஆகும் என தெரிவித்தது. ஆனால் இதனைக்கருத்தில் நீதிமன்றம் உடனடியாக இதனை நடைமுறைக்குக்கொண்டுவர வேண்டும் என தெரிவித்தது.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு பிரமாணப்பத்திரிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தது. அதில், “ இனிவரும் காலங்களில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்ப்பதற்கு முடிவு எடுத்துள்ளதாகவும்“ அதனை விரைவில்  நடைமுறைப்படுத்துவோம் எனக்கூறியுள்ளது. இதனைப்பதிவு செய்துக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹ்ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தேசிய பாதுகாப்பு படைக்கான தேரவில் பெண்களுக்கும் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று  இடைக்கால உத்தரவைப்பிறப்பித்தனர். மேலும் இவ்வழக்கினை ரத்து செய்ததோடு, இந்த ஆண்டு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் வருகின்ற நவம்பர் மாதம் வரவிருக்கும் தேர்வில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

  • NDA & NA தேர்விற்கு இனி பெண்களும் விண்ணப்பிக்கலாம்.. இதுதான் வழிமுறை..!

ஆனால் உடனடியாக இதனை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசிற்கு சிரமம் இருந்தாலும், உச்சநீதிமன்றத்தின் உத்தவினை மீற முடியாது என்பதால் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் கடற்படை அகாடமியில் சேர விரும்பும் பெண்களும் இந்த ஆண்டுக்கான தேர்வு விண்ணப்பப்படிவத்தை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதற்காக கடந்த ஜூன் 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 10/2021 – NDA II ல் திருத்தம் செய்துள்ளது.

எனவே மத்திய அரசின் தற்போதைய உத்தரவின் படி பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிந்துக்கொள்வோம்.

தேசிய பாதுகாப்பு படை மற்றும் கடற்படை அகாடமியில் சேர விரும்பும் பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வருகின்ற அக்டோபர் 8 ஆம் மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • NDA & NA தேர்விற்கு இனி பெண்களும் விண்ணப்பிக்கலாம்.. இதுதான் வழிமுறை..!

குறிப்பாக 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்வில் திருமணம் ஆகாத பெண்கள் மட்டும் கலந்துக்கொள்ளும் வகையில் ஆன்லைன் விண்ணப்ப வசதியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தேசிய பாதுகாப்பு அகாடமியில் 370 பணியிடங்களையும், கடற்படை அகாடமியில் 30 பணியிடங்களையும் நிரப்புவதை நோக்கமாகக்கொண்டு இந்தாண்டு தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெண்கள்  NDA/ NA வில் சேருவதற்கு தேவையான உடல் தகுதிகள் அமைச்சகத்தால் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் 250 ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் வேலைவாய்ப்பு ! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
உச்ச நீதிமன்றத்தில் 250 ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் வேலைவாய்ப்பு ! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
ITBP-யில் விளையாட்டு வீரர்களுக்கு 126 காவலர் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!
ITBP-யில் விளையாட்டு வீரர்களுக்கு 126 காவலர் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!
ரயில்வேயில் சென்னை மண்டலத்தில் 141 காலியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க..
ரயில்வேயில் சென்னை மண்டலத்தில் 141 காலியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க..
CRPF வேலைவாய்ப்பு 2026: கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
CRPF வேலைவாய்ப்பு 2026: கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
Embed widget