JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
CHENNAI JOB ALERT : இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிடும் வகையில், சென்னையில் 10ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.08.2026 அன்று சென்னை-83. அசோக்நகரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடத்தப்படவுள்ளது.
10ஆயிரம் காலிப்பணியிடம்
இவ்வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ. தொழில்கல்வி பெற்றவர்கள். பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி.?
இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. மேலும். இம்முகாமில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் சென்னை-32. கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் , https://forms.gle/W4Kvwo9LeMZg4sKS7 στο Google Link-லோ தங்களதுவிவரங்களை பதிவு செய்துக் கொண்டு பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மாலதி ஹெலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















