UPSC IFS 2023 Notification: இந்திய வனத்துறை தேர்வு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
UPSC IFS 2023 Notification : இந்திய வனத்துறை பணி தேர்வுக்கான தகுதிகள் என்னென்ன என்பதை பற்றி இங்கே காணலாம்.
இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய இந்திய வனத்துறை பணி தேர்வுக்கான (INDIAN FOREST SERVICE EXAMINATION )அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தோராயமாக 150 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி-21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.
இந்திய வனப் பணி தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். இந்திய வனத்துறையில் உள்ள முக்கிய பதவிகளுக்கு இத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வைப் போல் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் நடைபெறும்.
பணி விவரம்:
வனத்துறை அலுவலர்கள் - 150 (தோராயமாக)
வயது வரம்பு:
இத்தேர்வை எழுத 21 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பில் கண்டு தெரிந்துகொள்ளவும்.
கல்வித் தகுதி:
Animal Husbandry மற்றும் Veterinary Science, உயிரியல், இயற்பியல், கணிதம், புவியியல், வேதியல், Statistics, வேளாண் அறிவியல், Forestry/Engineering ஆகிய பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்திலிருந்து படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 கட்டங்களிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்பவும் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.
உடற்தகுதி மற்றும் மருத்துவ தகுதி தேர்வு மதிப்பெண் தகுதிபெற முக்கியமாகும்.
பிப்ரவரி 21ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் https://upsconline.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அதில், One-time registration (OTR) for examinations of UPSC and online application என்ற பகுதியைத் தேர்வு செய்து, க்ளிக் செய்யவும்.
* முன்பதிவு செய்யாதவர்கள், புதிதாக விண்ணப்பித்து முன்பதிவு செய்ய வேண்டும்.
* ஏற்கெனவே செய்துள்ளவர்கள், இ- மெயில், மொபைல் எண் அல்லது ஓடிஆர் ஐடி மூலம் உள்நுழைய வேண்டும்.
* இதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணம்
அனைத்து தேர்வர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் ஆகும். அதே நேரத்தில் பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை.
எப்படி விண்ணப்பிப்பது?
https://www.upsc.gov.in/- என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முதல் நிலை தேர்வுகள் 2023 மே மாதம் 28 ஆம் நாள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மைத் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://www.upsc.gov.in/sites/default/files/Notif-IFSP-2023-engl-010223.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.02.2032
மேலும் வாசிக்க..