மேலும் அறிய

அருமையான தொழிற்பயிற்சி... அதுவும் உதவித் தொகையுடன் - எங்கு தெரியுங்களா?

சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயிற்சி அளிக்க இருக்காங்க. உங்களுக்கான வாய்ப்பு இதோ.

வாலிபர்கள் கவனத்திற்கு... அருமையான தொழிற் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுவும் உதவித் தொகையுடன். எங்கு தெரியுங்களா? முழு விபரம் உங்களுக்காக!!!

சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயிற்சி அளிக்க இருக்காங்க. ICF சென்னை 2025-ம் ஆண்டுக்கான தொழில்பயிற்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 1,010 இடங்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

ரயில்வேயில் பயிற்சி பெற அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. இதை மிஸ் செய்து விடாதீர்கள். சென்னையில் அமைந்துள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையான ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF) தொழிற்பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். 10ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

மத்திய அரசு நிறுவனங்களில் தொழிற்பயிற்சி சட்டம் 1961 படி, 1 வருடத்திற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் ரயில்வே துறையின் கீழ் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் அனுபவமில்லாதவர்கள் மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்பெண்டர், எலெக்ட்ரிஷியன், பிட்டர், மெக்கானிஸ்ட், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 1,010 பணியிடங்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் புதியதாய் சேர்பவர்களுக்கு 330 இடங்கள், ஐடிஐ முடித்தவர்களுக்கு 680 இடங்கள் என வழங்கப்படுகிறது. இது அருமையான வாய்ப்பு. முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவித் தொகையுடன் வழங்கப்படும் தொழிற் பயிற்சியை மிஸ் செய்யலாமா?

தொழிற்பயிற்சியின் படி கார்பெண்டர் 90,  எலெக்ட்ரிஷியன் 200, பிட்டர் 260, மெக்கானிஸ்ட் 90, பெயிண்டர் 90, வெல்டர் 260, ரேடியோலாஜி 5, பாதோலாஜி 5, பாசா (PASAA) 10 என மொத்தம் 1,010 இடங்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

ஐடிஐ தகுதி பெற்றவர்களுக்கு 1 வருடமும், 10-ம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கு 2 வருடமும், வெல்டர் மற்றும் ரேடியோலாஜி, பாதோலாஜி பிரிவுகளில் 1 வருடம் 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தொழிற்பயிற்சிக்கு 11.08.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 15 வயதை நிறைந்து இருக்க வேண்டும். மேலும் அதிகப்படியாக 22 வயதைக் கடந்திருக்கக்கூடாது. ஐடிஐ முடித்தவர்கள் அதிகப்படியாக 24 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது.

பிட்டர், எலெக்ட்ரிஷியன், கார்பெண்டர், பெயிண்டர், வெல்டர், ப்ரோகிராமிங் மற்றும் சிஸ்டம் ஆகிய பிரிவுகளில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்தந்த தொழிற் பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனுபவம் இல்லாதவர்களுக்கான இடங்களுக்கு 10-ம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரேடியோலாஜி மற்றும் பாதோலாஜி இடங்களுக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கொண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழிற்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களில் 10-ம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.6,000 உதவித்தொகையாக வழங்கப்படும். அதே போன்றும், 12-ம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.7,000 மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7,000 உதவித்தொகையாக வழங்கப்படும். 2ஆம் ஆண்டு பயிற்சி காலத்தில் கூடுதலாக 10% உயர்த்தப்படும். விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மெரிட் பட்டியல் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடற்தகுதி/ மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இறுதியாக அவர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://pb.icf.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. மாற்றுத்திறனாளிகளும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 12 முதல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பெறப்படுகிறது. எனவே காலதாமதம் செய்யாமல் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
MG Hector Hawk: மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Embed widget