மேலும் அறிய

சப்-இன்ஸ்பெக்டர் ஆகவேண்டுமா!… 444 பணியிடங்களுக்கு தேர்வு நடத்துகிறது சீருடை பணியாளர் வாரியம்!

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNUSRB 444 Sub inspector recruitment 2022 apply soon: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காக்கிசட்டை போட விரும்பும் என்ற கனவை உடையோர்கள் நனவாக்குவதற்கான அரிய வாய்ப்பு இதோ வந்துவிட்டது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 444 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

சப்-இன்ஸ்பெக்டர் ஆகவேண்டுமா!… 444 பணியிடங்களுக்கு தேர்வு நடத்துகிறது சீருடை பணியாளர் வாரியம்!

பதவியின் பெயர்: காவல் உதவி ஆய்வாளர் (SUB-INSPECTORS OF POLICE)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 444

காலியிடங்களின் விவரம்: 

காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா) SUB-INSPECTORS OF POLICE (TALUK): 399 (ஆண் – 279, பெண்/ திருநங்கை – 120)

காவல் உதவி ஆய்வாளர் (ஆயுதப்படை) SUB-INSPECTORS OF POLICE (ARMED RESERVE): 45 (ஆண் – 32, பெண்/ திருநங்கை – 13)

வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC, BC (M), MBC/DNC பிரிவினர் 32 வயது வரையிலும், SC, SC(A), (ST) மற்றும் திருநங்கைகள் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.36,900 – 1,16,600

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர் ஆகவேண்டுமா!… 444 பணியிடங்களுக்கு தேர்வு நடத்துகிறது சீருடை பணியாளர் வாரியம்!

தேர்வுமுறை:

எழுத்துத் தேர்வு: இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெறவில்லை என்றால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படாது. இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். இது 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும்.

உடற்தகுதி தேர்வு: எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். இது 15 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

நேர்முகத்தேர்வு: உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு 10 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

NCC அல்லது NSS அல்லது விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்களாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செயல்முறை இருக்கும். தேர்வர்கள் 100 மதிப்பெண்களுக்கு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், வேலை வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை க்ளிக் செய்து https://si2022.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action அதன் மூலம் திறக்கப்படும் இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.04.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இந்த இரண்டு pdf-களில் ஒன்றை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

PDF 1 : https://tnusrb.tn.gov.in/pdfs/siadvertisement.pdf

PDF 2: https://tnusrb.tn.gov.in/pdfs/informationbrochuresubinspectorofpolice.pdf

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Embed widget