மேலும் அறிய

TNUSRB Recruitment 2023: 10-ம் வகுப்பு போதும், 3,359 அரசுப் பணி இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுக்கு இன்று (ஆகஸ்ட் 18) முதல் விண்ணப்பிக்கலாம்.

10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுக்கு இன்று (ஆகஸ்ட் 18) முதல் விண்ணப்பிக்கலாம்.
 
தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌, 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (ஆயுதப்படை மற்றும்‌ தமிழ்நாடு சிறப்புக்‌ காவல் படை), இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை இன்று முதல் வரவேற்கிறது. எனினும்  இணையவழி விண்ணப்பம்‌ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 
 
ஊதிய விகிதம்‌
 
இதில் தேர்வாகும் தேர்வர்களுக்கு ஊதியம் ரூ.18,200 முதல் 67,100 வரை அரசால் வழங்கப்படும்.  
 
இணைய வழி விண்ணப்பத்தைச்‌ சமர்ப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி: 18.08.2023 (இன்று)
இணைய வழி வண்ணப்பம்‌ சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.09.2023
 
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். 
 
மொத்த காலிப் பணியிடங்கள்‌: 3,359
 
காவல்துறை
 
இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ மாவட்ட / மாநகர ஆயுதப்படை
 
ஆண்கள் - 0
பெண்கள் - 780 
மொத்தம் - 780
 
இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை) 
ஆண்கள் - 1,819 
பெண்கள் - 0
மொத்தம் - 1,819
 
சிறை மற்றும்‌ சீர்திருத்தத்‌ துறை 
 
இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌
ஆண்கள் - 83
பெண்கள் - 3
மொத்தம் - 86
 
தீயணைப்பு மற்றும்‌ மீட்புப் பணிகள்‌ துறை
தீயணைப்பாளர்‌ 
ஆண்கள் -  674
பெண்கள் - 0
மொத்தம் -  674
 
மொத்தம்‌: 
ஆண்கள் - 2576 
பெண்கள் -  783
மொத்தம்‌- 3359
 
ஒதுக்கீடுகள்‌:
 
மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில்‌ கலந்து கொண்டவர்களுக்கு 10%, சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கு 10%, முன்னாள்‌ இராணுவத்தினருக்கு 5% மற்றும்‌ ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும்‌.
 
வகுப்பு வாரி இட ஒதுக்கீடு:
 
தற்போதுள்ள அரசு விதிகளின்‌படி வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும்‌.
 
கல்வித்‌ தகுதி :
 
குறைந்தபட்சம்‌ பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.
 
வயது வரம்பு (01.07.2023-ன்‌ படி):
 
குறைந்தபட்சம்‌ 18 வருடங்கள்‌, அதிகபட்சம்‌ 26 வருடங்கள்‌ (வயது உச்ச வரம்பு பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்)

தேர்வு முறை எப்படி?

* எழுத்துத் தேர்வு- 70 மதிப்பெண்கள்  (தமிழ் மொழி தகுதித் தேர்வும் உண்டு. இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். அதன்பிறகே எழுத்துத் தேர்வு நடைபெறும்.)
* உடல் தகுதித் தேர்வு- 24 மதிப்பெண்கள்
* சிறப்புத் தேர்வு - 6 மதிப்பெண்கள் 

தேர்வுக் கட்டணம் எவ்வளவு?

தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.250 தொகையைச் செலுத்த வேண்டும்.  எஸ்பிஐ வங்கி இ- சலானாகவோ ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம். 

மேலே குறிப்பிட்ட விவரங்களை விரிவாக அறிய: https://www.tnusrb.tn.gov.in/commonrecruitment-tnusrb.php என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

பாடத்திட்டங்களுக்கான இணைப்பு

இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (ஆயுதப்படை மற்றும்‌ தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை), இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிகளுக்கான நேரடி தேர்வு பாடத்திட்டங்களை https://www.tnusrb.tn.gov.in/pdfs/syllabus.pdf என்ற இணைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு குறித்த முழு விவரங்களுக்கு: https://www.tnusrb.tn.gov.in/pdfs/InformationBrochureCR2023.pdf

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை... பழனிசாமிக்கு ஏன் தொடை நடுங்குது? அமைச்சர் ரகுபதி விளாசல்
இதை, அவரின் பேரன்கூட நம்பமாட்டான்.. ‘Cringe’ செய்யும் பழனிசாமி.. விளாசி தள்ளிய திமுக
'Bhargavastra' Anti Drone System: இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்EPS Plan | Ponmudi vs Lakshmanan  | பொன்முடி இனி டம்மி!  பவருக்கு வந்த எ.வ.வேலு  லட்சுமணன் GAME STARTS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை... பழனிசாமிக்கு ஏன் தொடை நடுங்குது? அமைச்சர் ரகுபதி விளாசல்
இதை, அவரின் பேரன்கூட நம்பமாட்டான்.. ‘Cringe’ செய்யும் பழனிசாமி.. விளாசி தள்ளிய திமுக
'Bhargavastra' Anti Drone System: இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
Cabinet Meeting Outcomes: ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
John Spencer on Operation Sindoor: அட இதுவல்லவோ பாராட்டு -  ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி சொல்வது என்ன?
அட இதுவல்லவோ பாராட்டு - ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி சொல்வது என்ன?
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்! மே 16-ல் வெளியீடு- 11ஆம் வகுப்புக்கு எப்படி?
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்! மே 16-ல் வெளியீடு- 11ஆம் வகுப்புக்கு எப்படி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS..  சீமானின் பக்கா ஸ்கெட்ச்.  அதிமுக- நாதக கூட்டணி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS.. சீமானின் பக்கா ஸ்கெட்ச். அதிமுக- நாதக கூட்டணி?
Embed widget