மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி: எப்படி விண்ணப்பிப்பது? கடைசி தேதி எப்போது? விவரங்கள் இங்கே!
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 30 .
தமிழகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு தகுதியும் அனுபவமும் கொண்ட பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தின்கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவில், 16 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான தொகுப்பு ஊதியமாக ரூ. 56,100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகள் 9.30 முதல் 12.30 மணிவரை பாடத் தேர்வும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணிவரை தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வு நடைபெறும். இந்த இரு தேர்வுகளும் கணினி வழியாக நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் இணைய வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போதே அவர்களால் இணையவழி விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள்/ உரிமை கோரல்களுக்கு ஆதாரமான அனைத்து தேவையான சான்றிதழ்களையும் இணையவழி விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழி தேர்வு முடிவுகள் ஆக்ஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும்.
கல்வித்தகுதி:
சமூகப் பணி, சமூகவியல், உளவியல், குற்றவியல், குழந்தை வளர்ச்சி உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முப்பத்திரண்டு வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வஇணையதளத்தில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும் ---
https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==
விண்ணப்ப கட்டணம்:
பதிவு கட்டணம்: ரூ.150
தேர்வுக் கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.04.2022
மேலும் விவரங்களுக்கு: www.tn.gov.in
தொடர்பு எண்: 044-26421358
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்