TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி 861 தொழில்நுட்ப பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணிகளுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (செப்.11) கடைசித் தேதி ஆகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான பணியிடங்களுக்கு, டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளைப் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே (செப்.11) கடைசித் தேதி ஆகும்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி, தேர்வுகள் மூலம் அரசு காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களைத் தேர்வு செய்து கொடுக்கி
றது. இந்த நிலையில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான (ஐடிஐ, டிப்ளமோ லெவல்) பணியிடங்களுக்கு, டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளைப் படித்தவர்கள் ஆக. 13ஆம் தேதி முதல் விண்ணப்பித்த நிலையில், இன்று (செப்டம்பர் 11ஆம் தேதி) கடைசித் தேதி என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் தொழில்நுட்ப உதவியாளர், சர்வேயர் மற்றும் உதவியாளர் வரைவாளர், டெக்னீஷியன், உதவி ஆய்வாளர், விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அதிகாரி, ஜூனியர் வரைவு அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி திட்டமிடுதல் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு இதன்மூலம் விண்ணப்பிக்கலாம். ஆர்வமும், தகுதியும் உடையவர்கள் இன்று நள்ளிரவு (செப்டம்பர் 11ஆம் தேதி) வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். செப்.15 முதல் 17 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும் தகுதியான நபர்களுக்கு, விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்ய 150 ரூபாயைச் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை
* எழுத்துத் தேர்வு
* சான்றிதழ் சரிபார்ப்பு
முதல் தாளாக தமிழ் மொழி தகுதித் தேர்வு (Tamil Eligibility Test), பொது அறிவு (General Studies) மற்றும் மனத்திறன் தேர்வு (Aptitude and Mental Ability Test ) ஆகியவை நடைபெற உள்ளன. நவம்பர் 9ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. இரண்டாம் தாளாக முதன்மை எழுத்துத் தேர்வு நவம்பர் 11ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தேர்வு நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அதில் யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
* அதில் கேட்கும் விவரங்களைப் பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்கள், அவற்றுக்கான தகுதி, காலி இடங்கள், வயது வரம்பு, ஊதியம், விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள், பாடத்திட்டம், விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் https://tnpsc.gov.in/Document/english/CTSE_DIP_Eng_13.08.2024_.pdf என்ற இணைப்பில் காணலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/