பெண்களே! இலவச ஓட்டுநர் பயிற்சி & வேலைவாய்ப்பு: தமிழக அரசின் புதிய திட்டம்! முழு விவரம்
கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேளூர், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, பாளையங்கோட்டை, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களில் பயிற்சி நடக்கவிருக்கிறது

மகளிருக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், தமிழக அரசு ஒரு சிறப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளது. பெண்கள் வணிக வாகன ஓட்டுநராக உருவாகும் வகையில் இலவச பயிற்சி திட்டம் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பயிற்சி சாலை போக்குவரத்து நிறுவனம் (Institute of Road Transport) மூலம், தொழில் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுகிறது.
இந்த பயிற்சி மூலம் பெண்கள் PSV (Public Service Vehicle) வகை வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் மற்றும் தொழில்முனைவோர் சான்றிதழ் பெறலாம். பயிற்சி முழுவதும் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி முடிந்தவுடன் வேலைவாய்ப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
பயிற்சி நடைபெறும் இடங்கள்:
கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேளூர், திருச்சி (மின்னெழில்), கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, பாளையங்கோட்டை, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களில் பயிற்சி நடக்கவிருக்கிறது.
பயிற்சி காலம்:
65 வேலை நாட்கள்
தகுதிகள்:
-
வயது: 18 – 35 (சில நிலைகளில் 40 வரை அனுமதி உள்ளது)
-
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி
-
இலங்குப் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் முன்னுரிமை பெறுவார்கள்
-
மருத்துவச் சோதனை, கண் பார்வை சோதனை போன்றவை நடைபெறும்
பயிற்சியில் சேர வேண்டிய ஆவணங்கள்:
-
கல்விச்சான்றிதழ்கள் (8ம் வகுப்பு முதல்)
-
பிறந்த சான்றிதழ்
-
ஓட்டுநர் உரிமம் (இருப்பின்)
-
ஆதார், இருப்பிட சான்றிதழ்
-
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (2)
-
Bank Passbook நகல்
பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி!
— ArasuBus (@arasubus) July 12, 2025
இப்பயிற்சி "நான் முதல்வன் திட்டத்தின் கீழ்" தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் (Institute of Road Transport) மூலம் இலவசமாக அளிக்கப்படவுள்ளது.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 ஆகஸ்ட்,… pic.twitter.com/FQJrKjErFM
எப்படி விண்ணப்பிக்கலாம்?
விருப்பமுள்ளவர்கள் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு “நான் முதல்வன்” இணையதளத்திலோ, அருகிலுள்ள அரசு தொழில்நுட்ப பயிற்சி மையங்களிலோ தொடர்புகொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20 ஆகஸ்ட், 2025
இந்த திட்டம் மூலம் பெண்கள் தங்களைத் தாங்களே நம்பும் தன்மையை வளர்த்துக்கொண்டு ஒரு துறையில் முன்னேற முடியும். சமூகத்தில் பெண்களின் பங்கும், வேலைவாய்ப்பும் அதிகரிக்க ஒரு முக்கியமான வாய்ப்பு இது.
இந்த லிங்க் மூலம் விண்ணப்பிக்கலம்: candidate.tnskill.tn.gov.in/skillwallet/






















