TNPSC Recruitment: ஃபார்மசி படிப்பு முடித்திருக்கிறீர்களா? டி.என்.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
TNPSC Recruitment: தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இங்கே காணலாம்.
தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய மருந்து சோதனை ஆய்வகக் கூடத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION) வெளியிட்டுள்ளது.
பணி விவரம்
இளநிலை பகுப்பாய்வாளர் (Junior Analyst)
கல்வித் தகுதிகள்
இதற்கு விண்ணப்பிக்க ஃபார்மசி, வேதியியல் அல்லது Pharmaceutical Chemistry படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பந்தப்பட்ட படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் ஓராண்டு பணி அனுபவம் இருந்தால் போதுமானது.
ஊதிய விவரம்:
இதற்கு ஊதியமாக ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150
எழுத்துத் தேர்வு - ரூ.100
தேர்வுக் கட்டணச் சலுகை/ விலக்கு விவரம்:
ஒரு முறை பதிவு / நிரந்தரப்பதிவு:
விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்:
இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம்,வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:
எப்படி விண்ணப்பிப்பது?
www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2023
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://www.tnpsc.gov.in/Document/tamil/17_2023_TAMIL.pdf - என்ற லிங்கை கிளிக் செய்யவும்.