TNPSC: மாணவர்கள் கவனத்திற்கு ..! குரூப் -2, 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Syllabus: தமிழ்நாடு அரசு பணிகளுக்கான குரூப் -2, 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து, டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TNPSC Syllabus: குரூப் -2, 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் -2, 2ஏ தேர்வுக்கு தனித்தனியே முதன்மை தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The revised syllabus of Combined Civil Services (Main) Examination-II (Group II Services), the syllabus for Combined Civil Services (Main) Examination – Group IIA Services and the scheme of examination are hosted on the Commission’s website.
— TNPSC (@TNPSC_Office) May 24, 2024
Syllabus-https://t.co/kP8hsohnOL… pic.twitter.com/tODu24AduQ
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வு-II (குரூப் II சர்வீசஸ்), ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வுக்கான பாடத்திட்டம் - குரூப் IIA சேவைகள் மற்றும் தேர்வுத் திட்டம் ஆகியவை கமிஷனின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. பாடத்திட்டம்- tnpsc.gov.in/English/syllab திட்டம்- tnpsc.gov.in/English/scheme
“ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட இணையதள முகவரியை அணுகி பாடத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை, குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வரும் நபர்கள் அறிந்துகொள்ளலாம்.
தேர்வு அட்டவணை:
குரூப் 1, 2, 4 தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த திருத்தப்பட்ட ஆண்டு தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதன்படி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளன. குரூப் 1 தேர்வு ஜூலை 13ஆம் தேதியும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
குரூப் 4 தேர்வுகள், 6,244 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகின்றன. அதேபோல, குரூப் 1 தேர்வு 90 காலி இடங்களை நிரப்ப, ஜூலை 13ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு (நேர்காணல் பணியிடங்கள்), ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. 2030 பணி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 28ஆம் தேதி இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் தான் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
Group 2, 2 ஏ தேர்வில் முக்கிய மாற்றம்
இதனிடையே, TNPSC Group 2, 2 ஏ தேர்வில் முக்கிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்பட், வழக்கம்போல குரூப் 2 மெயின்ஸ் தேர்வு விவரித்து எழுதும் வகையில் டிஸ்கிரிப்டிவ் முறையில் நடத்தப்படும். அதேநேரத்தில் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு, அப்ஜெக்டிவ் (கொள்குறி) முறையில் நடத்தப்பட உள்ளது. எனினும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வில் பின்பற்றப்படும் தமிழ் தகுதித் தேர்வு (Tamil Eligibility Test) மட்டும் விரித்து எழுதும் வகையில் நடைபெற உள்ளது.
மிக அதிகமான பணியிடங்கள்
Aptitude & Mental Ability தேர்வுக்குப் பதிலாக Reasoning and General Intelligence தேர்வு நடைபெற உள்ளது. Group 2, 2 ஏ தேர்வுக்கு மொத்தம் 2030 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக குரூப் 4 தேர்வுக்குப் பிறகு மிக அதிகமான பணியிடங்கள் குரூப் 2 தேர்வில்தான் இருக்கும். அந்த வகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 4 தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் குரூப் 2 ஏ தேர்விலும் கலந்துகொண்டு, வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகிறது.