மேலும் அறிய

SSC CHSL Recruitment 2024:+2 தேர்ச்சி பெற்றவரா? 3,712 பணியிடங்கள்; எஸ்.எஸ்.சி. வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

SSC CHSL Recruitment 2024:மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்தும் 'Combined Higher Secondary (10+2) Level' தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் குரூப் சி பிரிவு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சுமார் 3,712  கிளர்க் மற்றும் டேட்டா என்ட்ரி காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரத்தை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.  இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

பணி விவரம்:

க்ளார்க் (Lower Division Clerk LDC) / Junior Secretariat Assitant (JSA)

Data Entry Operator (DEO)

Data Entry Operator Grade A 

இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 3,712 பணியிடங்கள் நிரப்பட்ட உள்ளதாகவும், இருப்பினும், மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு தேர்வாணையத்தின் முடிவே இறுதியானது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: 

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

  • Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) - Pay Level-2 ரூ.19,900 முதல் ரூ. 63,200)
  • Data Entry Operator (DEO)- Pay Level-4- ரூ. 25,500 முதல் ரூ.81,100 மற்றும்  Level-5-ரூ.29,200 முதல் ரூ. 92,300 வரை
  • Data Entry Operator, Grade ‘A’-Pay Level-4- ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18  வயது முதல் 27 வரை இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முழு விவரம் அறிய https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice%20of%20CHSLE%202024_05_04_24.pdf- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், பெண்கள், முன்னாள் இராணுவ பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

இதற்கு கம்ப்யூட்டர் வழியிலான ஆன்லைன் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகள் நடத்தப்படும்.

முதல்நிலை எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:

SSC CHSL Recruitment 2024:+2 தேர்ச்சி பெற்றவரா? 3,712 பணியிடங்கள்; எஸ்.எஸ்.சி. வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

இரண்டாம்நிலை எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:

SSC CHSL Recruitment 2024:+2 தேர்ச்சி பெற்றவரா? 3,712 பணியிடங்கள்; எஸ்.எஸ்.சி. வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

கூடுதல் தகவல்களுக்கு:

ஆங்கில மொழியில் உள்ள அறிவிப்பின் லிங்கை https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice%20of%20CHSLE%202024_05_04_24.pdf - க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
    home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.
  • SSC GD Constable Recruitment, Apply என்பதை கிளிக் செய்யவும்
  • முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும் 
  • ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்
  • புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

முக்கியமான நாட்கள்:

SSC CHSL Recruitment 2024:+2 தேர்ச்சி பெற்றவரா? 3,712 பணியிடங்கள்; எஸ்.எஸ்.சி. வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

விண்ணப்பிக்க கடைசி தேதி- 07.05.2023 - இரவு 11 மணி வரை

விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய கடைசி நாள் - 10.05.2023 - 11.05.2023

முதல் நிலை கம்யூட்டர் தேர்வு நடைபெறும் மாதம்-  ஜூன், ஜூலை - 2024

இரண்டாம் நிலை கம்ப்யூட்டர் தேர்வு நடைபெறும் மாதம்- தேர்வு நடைபெறுவது குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 23 காலியிடங்கள்!
கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 23 காலியிடங்கள்!
படிக்கும்போதே உதவித்தொகை... முடித்ததும் ₹22,000 சம்பளத்தில் வேலை! தாட்கோவின் சூப்பர் திட்டம்!
படிக்கும்போதே உதவித்தொகை... முடித்ததும் ₹22,000 சம்பளத்தில் வேலை! தாட்கோவின் சூப்பர் திட்டம்!
புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: இலவச பேருந்து, மருத்துவ வசதிகளுடன் கலெக்டர் தலைமையில் அதிரடி ஏற்பாடுகள்!
புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: இலவச பேருந்து, மருத்துவ வசதிகளுடன் கலெக்டர் தலைமையில் அதிரடி ஏற்பாடுகள்!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget