SSC CGL Exam 2022 : எஸ்.எஸ்.சி ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான தேர்வு; புதிய அறிவிப்பு வெளியீடு; இதைப் படிங்க!
SSC CGL Exam 2022 : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சி.ஜி.எல். -இன் இரண்டாம் நிலைத் தேர்வுக்கான வரைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சி.ஜி.எல். (Combined Graduated Level Examination ) பணிக்கான இரண்டாம் நிலைத் தேர்வு (Tire - 2) விவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்
Combined Graduate Level Service
காலி இடங்கள்- தோராயமாக 20,000 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி, இளநிலை புள்ளியல் அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு நடக்கும் எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு டிசம்பர் 1- ஆம் தேதி முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாம் நிலைத் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இரண்டாம் நிலைத் தேர்வு மார்ச் 2-ஆம் தேதியில் இருந்து 7-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இரண்டாம் நிலைத் தேர்வு மூன்று தாள்களை கொண்டிருக்கிறது.
முதல் தாள் இரண்டு பிரிவுகளாக நடக்க உள்ளது.
செசன் 1 மூன்று நிலைகளில் நடைபெறும். முதல் நிலை ஒரு மணி நேர தேர்வு- கணிதம், பொது அறிவி திறனறிதல் உள்ளிட்டவைகள் சார்ந்த கேள்விகளை கொண்டிருக்கும்.
செசென் 2 - ஒரு மணி நேரம் வழங்கப்படும். இதில் ஆங்கிலம், மொழி, பொது அறிவு உள்ளிட்டவைகள் சார்ந்த கேள்விகள் இடம்பெறும். செசன் 3- இது 15 நிமிடங்கள். கம்யூட்டர் அறிவு தொடர்பான கேள்விகள் இடம்பெறும்.
இதை தொடர்ந்து இரண்டாம் நிலைத் தேர்விற்கான செசன் -2 தேர்வு நடைபெறும்.
ஆன்லைன் தேர்வு என்பதால் நேர மேலாண்மை முக்கியம். குறிப்பிட்ட கால அளவு முடிந்தபிறகு போர்டல் செயல்படாது.
தேர்வு பாடத்திட்டம்:
எஸ்.எஸ்.சி தேர்வு
மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மத்திய ஆள் சேர்ப்பு முகமை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
அறிவிப்பின் கூடுதல் விவரஙக்ளுக்கு.. https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Important%20Notice_CGLE_2022_17022023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள வேலைபாய்ப்புகள் :
மத்திய அரசில் காலியாக உள்ள 11, 409 பணியிடங்களை ( எம்.டி.எஸ் பணியிடங்கள் ) நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் நீடிக்கப்படுள்ளது.பிப்ரவரி 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 24. 02.2023
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி – 26.02.2023 ( 23.00 )
காலிப் பணியிடங்கள்
- பல் துறை சார் பணியாளர்கள்- 10,880 பணியிடங்கள் (தோராயமாக)
- ஹவில்தார் - 529 பணியிடங்கள்
கடந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்வில், விரித்து எழுதும் வகையிலான தேர்வை எழுத தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும் முதல்கட்டமாக கணினி வழியில் நடைபெறும் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெற்றது.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. இவை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 11 ஆயிரத்து 409 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு முறை
இரண்டு கட்டமாக நடைபெற உள்ள தேர்வில் முதல்கட்டத் தேர்வில் எண் மற்றும் கணித திறன், பகுத்தறியும் திறன் மற்றும் சிக்கல் தீர்ப்பது குறித்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் கட்டத் தேர்வில் பொது அறிவு, ஆங்கில மொழி மற்றும் புரிதல் கேள்விகள் கேட்கப்படும்.
முதல்கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் 2ஆவது கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது.
ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப, உடல் தகுதித் தேர்வும் ( Physical Efficiency Test ) நடத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் ssc.nic.in என்ற இணைய தளத்தை க்ளிக் செய்யவும்.
* முகப்புப் பக்கத்தில் Apply க்ளிக் செய்யவும். செய்து, Others பக்கத்தை க்ளிக் செய்யவும்.
* அதில் தோன்றும் "Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2022" என்ற பக்கத்தைச் சொடுக்கவும்.
* லாகின், பாஸ்வேர்டை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும்