மேலும் அறிய

SSC CGL 2023: 7500 காலிப்பணியிடங்கள்.. பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட SSC.. முழு விவரம் உள்ளே..!

பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay Level-4 முதல் Pay Level-8 வரையிலான ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SSC என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காலியாக உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL ) பணிக்கான 7500 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், மே 3 ம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம் SSC
பணியின் பெயர் Combined Graduate Level (ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு)
பணியிடங்கள் 7500(தோராயமாக)
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online

SSC காலிப்பணியிடங்கள்:

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL ) தேர்வின் மூலம்  Assistant Section Officer, Sub Inspector, Assistant Audit Officer உள்ளிட்ட பல்வேறு பணிக்கான காலியாக உள்ள 7500 (தோராயமாக) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு:

8-27, 18-30, 18-32 மற்றும் 20-30 வயதிற்குள் உள்ள வெவ்வேறு பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அறிவிக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் குறைந்தபட்சமாக ஒரு இளங்கலை டிகிரி படித்திருக்க வேண்டும். 

CGL ஊதியம்:

பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay Level-4 முதல் Pay Level-8 வரையிலான ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு முறை:

SSC CGL 2023 கணினி அடிப்படையிலான தேர்வு அடுக்கு-I மற்றும் அடுக்கு-II என இரண்டு முறையில் நடத்தப்பட இருக்கின்றன. அடுக்கு-II தேர்வில் விண்ணப்பதாரர்களின் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் மட்டுமே தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் (பெண்கள்/SC/ST/PwD/ESM தவிர) ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் கட்டணத்தை மே 4 வரை செலுத்தலாம்.

எப்படி விண்ணப்பிக்கலாம்..? 

  • அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in க்கு செல்லவும்.
  • முகப்பு பக்கத்தில் (ஹோம் பேஜ்) பதிவு இணைப்பை கிளிக் செய்யவும்
  • போர்ட்டலில் உள்நுழைந்து SSC CGL 2023க்கு விண்ணப்பிக்கவும்
  • ஆவணங்களை (documents) பதிவேற்றம் செய்து, கட்டணம் செலுத்தி, சமர்ப்பிக்கவும்

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 321 அதிகாரி பணியிடங்கள்! வரும் 28ம் தேதி கடைசி நாள்
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 321 அதிகாரி பணியிடங்கள்! வரும் 28ம் தேதி கடைசி நாள்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Embed widget