மேலும் அறிய

SR Perambur Division Job: தமிழ்நாட்டில் 1,343 அப்ரெண்டிஸ் இடங்கள்: விண்ணப்பிக்க தெற்கு ரயில்வே அழைப்பு

Southern Railway Perambur Division : மாத உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship)  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் (Southern Railway) பெரம்பூர், அரக்கோணம், சென்னை ஆகிய கோட்டங்களில் ரயில்வே பணிமனைகளில் மாத உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship)  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனை ஆய்வகம் மற்றும் பணிமனைகளில் உள்ள எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளில் உள்ள பதவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

டீசல் மெக்கானிக், எலக்ட்ரிசியன், ஃபிட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர், வயர் மேன், பெயிண்டர், உள்ளிட்ட பணியிடங்களுக்கும், மருத்துவ ஆய்வகத்தில் உள்ள ரேடியாலஜி, இதய மருத்துவம் ஆகிய பிரிவுகளில் ஆய்வக உதவியாளர் ஆகிய துறைகளிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பணி விவரம்:

Trade Apprentice 

 மொத்த பணியிடங்கள் : 1,343

கல்வித் தகுதி:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 10 + 2 என்ற முறையில் பன்னிரெண்டாம் வகுப்பு , ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பயிற்சி காலம்:

வெல்டர் : ஓராண்டு மூன்று மாதங்கள்

ஃபிட்டர் மற்றும் பெயிண்ட்டர் - இரண்டு ஆண்டுகள்

ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் - ஓராண்டு மூன்று மாதங்கள்

வயதுவரம்பு:

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 15 வயது முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். ஐ.டி.ஐ. முடித்தவர்கள் 15 வயது பூர்த்தியடைந்தவர்களாவும்  முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: 

பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ. படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

உதவித் தொகை:

பயிற்சியின்போது பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

இந்தத் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ரூ.100. செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். பழங்குடியின/ பட்டியிலன பிரிவினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழு அறிவிப்பினை தெரிந்து கொள்ள  https://sr.indianrailways.gov.in/cris/uploads/files/1664596818778-CWPER_ActApprentices_Notification2022.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.10.2022

கவனிக்க..

இது தொடர்பாக அலுவலக தொடர்பு ரெயில்வே துறையின் ’ National Informatics Centre’ - “NICSMS”- இன் மெசேஜ் மூலமாகவும், “cwperactapp@gmail.com” என்ற இ-மெயில் முகவரி மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் வேறு எந்த தகவல்களையும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண்ணை வழங்குமாறும், இ-மெயில் எண்ணை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ வலைதள முகவரியாக www.sr.indianrailways.gov.in என்ற லிங்க்கில் கூடுதல் விவரங்களை பெறலாம். இந்தப் பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படாது என்பதையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள், இளங்கலை பட்டம் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Group 2 Exam Result: குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகளில் தாமதம் ஏன்? எப்போது வெளியாகும்?: டி.என்.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget