மேலும் அறிய

Group 2 Exam Result: குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகளில் தாமதம் ஏன்? எப்போது வெளியாகும்?: டி.என்.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகளில் தாமதம் ஏன் என்றும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகளில் தாமதம் ஏன் என்றும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று தெரிவித்துள்ளதாவது:

’’ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது.

இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள்‌ சென்னை உயர் நீதிமன்றத்தில்‌ நிலுவையில்‌ இருந்தன. மேற்படி வழக்குகளில்‌ சென்னை உயர் நீதிமன்றம்‌ தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில்‌ அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள்‌ மேற்கொள்ளப்பட்டன.

இதனைத்‌ தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின்‌ ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில்‌ உரிய மாற்றங்கள்‌ செய்யும்‌ பணி நிறைவடையும்‌ தருவாயில்‌ உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர்‌ மேற்படி‌ தேர்வின்‌ முடிவுகள்‌ விரைவில்‌ வெளியிடப்படும்‌ எனத்‌ தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக செய்தி, சமூக ஊடகங்களில்‌ வெளிவரும்‌ ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம்‌ எனவும்‌, அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ இணையதளத்தினை (https://www.tnpsc.gov.in/) மட்டுமே அணுகுமாறும்‌ தெரிவிக்கப்படுகிறது’’.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Group 2 Exam Result: குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகளில் தாமதம் ஏன்? எப்போது வெளியாகும்?: டி.என்.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பின்னணி என்ன?

2022ம் ஆண்டுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. இதற்காகத் தேர்வர்கள் 8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. 4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன. இவ்வாறு 993 குழுக்கள் செயல்பட்டன. 

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி முன்னதாக அறிவித்தது. எனினும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் தாமதமாகி வந்த நிலையில், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது. 

இந்த நிலையில் விடைத்தாள்கள் மழையில் நனைந்து சேதமானதால், தேர்வு முடிவுகள் தாமதமாவதாக தனியார் செய்தித் தொலைகாட்சியில் செய்தி வெளியானது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TANCET 2026: எம்இ, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேரணுமா? டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TANCET 2026: எம்இ, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேரணுமா? டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
US Iran Peace Talk:
US Iran Peace Talk: "எங்ககிட்ட விளையாடாதீங்க!" - ஈரானுக்கு ஜே.டி. வேன்ஸ் கொடுத்த 'வெயிட்டான' வார்னிங்!
Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!
Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!
Tamilnadu Roundup: விஜய் பரப்புரை மீண்டும் ரத்து.. வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: விஜய் பரப்புரை மீண்டும் ரத்து.. வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின் - தமிழகத்தில் இதுவரை
Embed widget