South Central Railway Recruitment: ரயில்வே துறையில் வேலை;யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இன்றே கடைசி!
South Central Railway Recruitment: இரயில்வேயின் தென் மத்திய வாரியத்தில் காலியாக உள்ள ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
இரயில்வேயின் தென் மத்திய வாரியத்தில் காலியாக உள்ள Junior Technical Associate பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் பணிக்கு அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்னப்பிக்க இன்றே (30.06.2023) கடைசி நாள்.
பணி விவரம்:
ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
டிப்ளமோ, M.Sc, B.Sc, ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில் பொறியியல் படிபில் தேர்ச்சி பெற்றிருர்க்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமாக - ரூ.25,000-ரூ.30,000 வழங்கப்படும்.
வயது வரம்பு -
இதற்கு 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 33 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பணியிடம்
குண்டூர், விஜயவாடா, ஐதராபாத்
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், பெண்கள் ஆகியோருர் ரூ.250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு ஆன்லைன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் www.scr.indianrailways.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின்னர் முகப்பில் contact us என்பதை கிளிக் செய்யவும்
- பின்னர் recruitment என்பதை கிளிக் செய்யவும் - www.scr.indianrailways.gov.in
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
- பின்னர், விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின்,ஜூன்,30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி
Secretary to Principal Chief Personnel Officer & Senior Personnel Officer (Engineering),
Office Principal Officer, 4th Floor, Personnel Department,
Rail Nilayam, South Central Railway, Secunderabad - 500025.
விண்ணப்பிக்க கடைசி தேதி - ஜூன் 30,2023
இது தொடர்பான கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள https://scr.indianrailways.gov.in/uploads/files/1685961214725-JTA_Notifn2023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.