மேலும் அறிய

SBI SCO Recruitment 2022: எஸ்.பி.ஐ. வங்கியில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்..!

SBI SCO Recruitment 2022 : பாரத் ஸ்டேட் வங்கியில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் பேங்க் வங்கியில் (SBI- State Bank of India)காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டிருந்தது. துணை மேலாளர் மற்றும் சீனியர் எக்ஸிக்யூடிவ் ஆகிய பணியிடங்கள் SPECIALIST CADRE OFFICER என்ற பிரிவின் கீழ் நிரப்பட உள்ளது.

இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதில் துணை மேலாளர் பணி நிரந்த பணி என்றும், சீனியர் எக்ஸிக்யூடிவ் பணி ஒப்பந்தம் அடிப்படையிலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு இன்று இரவு 23:59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணி விவரம்:

  • துணை மேலாளர் (Database Administrator) 
  • துணை மேலாளர்(Infrastructure Engineer)
  • துணை மேலாளர்(Java Developer) 
  • துணை மேலாளர்(WAS Administrator) 
  • Senior Executive (Frontend Angular Developer) 
  • Senior Executive (PL & SQL Developer) 
  • Senior Executive (Java Developer) 
  • Senior Executive (Technical Support) 
  • Executive (Technical Support) 
  • Senior Special Executive (Technology Architect) 


SBI SCO Recruitment 2022: எஸ்.பி.ஐ. வங்கியில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்..!

பணி இடம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் மும்பையில் பணியமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 

துணை மேலாளர் பணிக்கு இளங்கலை பொறியியல் அல்லது பி.டெக் படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இளங்களை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தப்பட்சம் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். பணியிடத்திற்கு ஏற்ற கோடிங் சாப்ட்ஃவேர் பற்றிய புரிதல் வேண்டும்.

சீனியர் எக்ஸிகியூடிவ் பணிடத்திற்கும் இளங்கலை பொறியியல் படித்திருக்க வேண்டும். அதோடு, Oracle Database PL ,SQL Developer ஆகிய பணியிடத்திற்கு தகுதியான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்ட்டியது அவசியம்.

வயது வரம்பு:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

துணை மேலாளர் பணியிடங்களுக்கு அடிப்படை மாத ஊதியமாக ரூ.48,170 வழங்கப்படும். மேலும், எஸ்.பி.ஐ.-இன் ஊதிய வரையறை பின்பற்றப்படும்.

சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பணியிடத்திற்கு ஆண்டு வருமானமாக 24 லட்சம் வரை வழங்கப்படும். 

பணி காலம்:

சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு மூன்றாண்டுகள் ஒப்பந்த காலம். திறன் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? 

https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்து கொள்வது நல்லது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:'

நிரந்த பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒப்பந்தம் அடிப்படையிலான பணிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம்:



SBI SCO Recruitment 2022: எஸ்.பி.ஐ. வங்கியில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்..!

கவனிக்க:

விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளப்பட்டுள்ளது. 

நேர்காணலுக்கான அழைப்பு குறித்த அறிவிப்பு பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவிக்கப்படும் என்றும், தனியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ தகவல் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் வலைதள முகவரி- https://www.onlinesbi.sbi/

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.12.2022

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 2023 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம்

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://wpassets.adda247.com/wp-content/uploads/multisite/2022/12/09133523/08122022_GITC-Ad-No.CRPD-SCO-2022-23-24.pdf - என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
வரும் ஆகஸ்ட் 28-க்குள் விண்ணப்பிக்கணும்... அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க: முழு விபரமும் உள்ளே
வரும் ஆகஸ்ட் 28-க்குள் விண்ணப்பிக்கணும்... அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க: முழு விபரமும் உள்ளே

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget