8-வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; இந்த மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி பிரிவில் வேலைவாய்ப்பு! விவரம் இதோ!
திண்டுக்கல் மாவட்ட் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அலுவலக உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
ஈப்பு ஓட்டுநர் ஊதியம்
அலுவலக உதவியாளர்
இரவுக் காவலர்
கல்வித் தகுதி:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு:
இந்தப் பணியிடங்களுக்கான வயது வரம்பு தொடர்பான தகவல்.
ஊதிய விவரம்:
1) ஈப்பு ஓட்டுநர் ஊதியம்: ரூ.19,500/- (13,500 -62,000)
2) அலுவலக உதவியாளர்: ரூ.15,700/-(15,700-50,000)
3) இரவுக்காவலர் : ரூ.15,700/-(15,700-50,000)
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்:
1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று
ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
5. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை எண்: 303, நிதி(ஊதியக்குழு) துறை நாள்:11.10.2017, அரசாணை எண்: 305, நிதி(ஊதியக்குழு) துறை நாள்:13.10.2017 மற்றும் அரசாணை எண்: 306, நிதி(ஊதியக்குழு) துறை நாள்:13.10.2017-இன்படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
154,வளர்ச்சிப்பிரிவு,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திண்டுக்கல்- 624 004
எப்படி விண்ணப்பிப்பது?
சுய விவரத்துடன் கூடிய அஞ்சல் ஸ்டாம்ப் ரூ.30 ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10X4 Inches Postal Cover)2 இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/10/2022 மாலை 05.45 வரை
அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://dindigul.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
ஆல் தி பெஸ்ட்..
மேலும் வாசிக்க..
Skill Development : சென்னையில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள்: முதல்ல இதை படிங்க..