மேலும் அறிய

RBI Recruitment 2023: 10வது படித்திருந்தாலே போதும்..! இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

RBI Recruitment 2023: ரிசர்வ் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தினை இங்கே காணலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியில் (Reserve Bank of India) காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.

பணி விவரம்

ஓட்டுநர்

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • விண்ணப்பதாரர் இலகுரக  வாகனம் (Light  motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
  • 10 ஆண்டுகளுக்கு குறையாமல் ஓட்டுநராக பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • வாகனம் பழுதுபார்ப்பதில்  (vehicle repair) குறித்து அறிந்திருக்க வேண்டும்.
  • மொழி அறிவு: ம்ராத்தி மொழியில் நன்கு பேச தெரிந்திருக்க வேண்டும்.  ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி இடம்

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மும்பையில் உள்ள அலுவலகத்தை அடிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்,  01.03.2023 அன்று 28 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியலின /  பழங்குடியின பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்றாண்டு வரை வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த வேலைவாய்ப்பிற்கு எழுத்துத் தேர்வு, வாகன ஓட்டுநர் திறன் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 450 ஆகும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50-ஐ மட்டும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஊதிய விவரம்

இதற்கு அடிப்படை ஊதியம்  ரூ.17,270/-  ஆக வழங்கப்படும்.  ரூ.37,770 அதிகபட்சமாக ஊதிய வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

எப்படி விண்ணப்பிப்பது?

www.rbi.org.in - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும், விவரங்களுக்கு, Recruitment for the Post of Driver in Reserve Bank of India, Mumbai என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ஆன்லைன் தேர்வு முறை:

RBI Recruitment 2023: 10வது படித்திருந்தாலே போதும்..! இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணபிக்க கடைசி தேதி: 16.04.2023

இது தொடர்பான முழு அறிவிப்பினை https://opportunities.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=4252- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

ரிசர்வ் வங்கியில் மற்றொரு வேலைவாய்ப்பு :

பணி விவரம்

மருத்துவ உதவியாளர் (Pharmacists)

கல்வித் தகுதி:

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 10+2 முறையில் பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  ’Pharmacy’ பிரிவில் டிப்ள்மோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/ கல்லூரி அகியவற்றில் இருந்து  (B. Pharm) in Pharmacy-யில் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 
  • மகாராஷ்டிரா மாநில ஃபார்மசி கவுன்சிலில் பதிவு செய்பவராக இருக்க வேண்டும். 
  • இதற்கு விண்ணப்பிக்க இரண்டு ஆண்டு காலம் பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  • கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

இதற்கு ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.400 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 மணி நேரம் வேலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு நாளைக்கு ரூ.2000 வரை பணித்திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். https://www.rbi.org.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி -10.04.2023 

இது தொடர்பான முழு அறிவிப்பினை https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/EPCHRM2103202308A19E987C344B5681646382D913E751.PDF- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget