மேலும் அறிய

ரயில்வேயில் வேலை வேண்டுமா? RRB-யில் 6180 டெக்னீசியன் பணியிடங்கள்: உடனே விண்ணப்பிங்க!

ஜூலை 28, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள டெக்னீசியன் பணியிடங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 6180 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கான கல்வித் தகுதிகள், ஊதியம், காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு செய்யும் முறை குறித்த முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் ஜூலை 28, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள டெக்னீசியன் பணியிடங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


ரயில்வேயில் வேலை வேண்டுமா? RRB-யில் 6180 டெக்னீசியன் பணியிடங்கள்: உடனே விண்ணப்பிங்க!

பணியின் பெயர்: டெக்னீசியன் கிரேடு – I (சிக்னல்)

காலியிடங்கள்: 180 , சம்பளம்: மாதம் ரூ.29,200/-

கல்வி தகுதி: இயற்பியல் (Physics) / எலக்ட்ரானிக்ஸ் (Electronics) / கணினி அறிவியல் (Computer Science - CS) / தகவல் தொழில்நுட்பம் (Information Technology - IT) / இன்ஸ்ட்ரூமென்டேஷன் (Instrumentation) ஆகியவற்றில் இளங்கலை அறிவியல் பட்டம் (Bachelor of Science) பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்குறிப்பிட்ட துறைகளில் ஏதேனும் ஒன்றில் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ (Diploma) அல்லது இன்ஜினியரிங் பட்டம் (Graduate in Engineering) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். காலியிடங்கள்: 6,000

சம்பளம்: மாதம் ரூ.19,900/-

பணியின் பெயர்: டெக்னீசியன் கிரேடு – III

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு (Matriculation / SSLC / 10th) தேர்ச்சி பெற்றிருப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட NCVT/SCVT நிறுவனங்களில் தொடர்புடைய வர்த்தகத்தில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய வர்த்தகங்களில் Course Completed Act Apprenticeship சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள்: SC, ST, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் அல்லது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் (EBC) போன்ற பிரிவினருக்கு ரூ.250 ஆகும். இவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை (Computer Based Test - CBT) எழுதிய பிறகு, முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.



ரயில்வேயில் வேலை வேண்டுமா? RRB-யில் 6180 டெக்னீசியன் பணியிடங்கள்: உடனே விண்ணப்பிங்க!

மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். கணினி அடிப்படையிலான தேர்வை எழுதிய பிறகு, ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்: கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test - CBT), ஆவண சரிபார்ப்பு (Document Verification - DV), மருத்துவ பரிசோதனை (Medical Examination - ME)

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.07.2025 தகுதியான விண்ணப்பதாரர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த  வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, இந்திய ரயில்வேயில்  பணியை அமைத்துக் கொள்ள ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்!

தலைப்பு செய்திகள்

242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget