மேலும் அறிய

பழனி முருகன் கோவிலில் 19 காலிப்பணியிடங்கள்.. ஆர்வமுள்ளவர்கள் மார்ச். 31-க்குள் விண்ணப்பிக்கவும்!

பழனி முருகன் கோவில் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோவிலில் செயல்பட்டுவரும் சித்தமருத்துமனையில் சித்த மருத்துவர் உள்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

தமிழகத்தில்  இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 44,218 கோயில்கள் இயங்கி வருகின்றனர். இவை அனைத்தையும் நிர்வகிக்க, கூடுதல் ஆணையர் (விசாரணை), கூடுதல் ஆணையர் (திருப்பணி), இணை ஆணையர் (தலைமையிடம்), இணை ஆணையர் (சட்டச்சேர்மம்), இணை ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்), இணை ஆணையர்(சரிபார்ப்பு-தலைமையிடம்), உதவி ஆணையர் (சட்டச்சேர்மம்), உதவி ஆணையர் (கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீ்ழ் பலர் பணியாற்றி வருகின்றனர்.

பழனி முருகன் கோவிலில் 19 காலிப்பணியிடங்கள்.. ஆர்வமுள்ளவர்கள் மார்ச். 31-க்குள் விண்ணப்பிக்கவும்!

இந்நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறைக்கட்டுப்பாட்டில் உள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் செயலபட்டுவரும் சித்த மருத்துவமனையில், சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், பாதுகாவலர், சுகாதாரப்பணியாளர் ஆகிய பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

இந்து சமய அறநிலையத்துறைப்பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள்: 19

சித்த மருத்துவர் – 3

கல்வித்தகுதி:

தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தால் சித்த மருத்துவத்தில் வழங்கப்பட்ட முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் – ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம்.

செவிலியர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் - 5

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் செவிலியர் பட்டப்படிப்பில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : மாதத் ரூபாய் 12 ஆயிரம் என நிர்ணயம்.

மருந்தாளுனர் – சித்தா (Pharmacist – Siddha) பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் - 3

கல்வித் தகுதி :

இப்பணிக்க விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ. 15,000 என நிர்ணயம்.

பாதுகாவலர் காவலர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் - 4

கல்வித்தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,000

சுகாதாரப் பணியாளர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் - 4

கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,000 என நிர்ணயம்.

வயது வரம்பு : மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முதலில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் கீழ்க்கண்ட முகவரிக்கு வருகின்ற மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

  • பழனி முருகன் கோவிலில் 19 காலிப்பணியிடங்கள்.. ஆர்வமுள்ளவர்கள் மார்ச். 31-க்குள் விண்ணப்பிக்கவும்!hi

அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,

பழனி- 624601

திண்டுக்கல் மாவட்டம்.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32203  என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget