IOB வங்கியில் பணிபுரிய வாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
இந்தியன் ஓவர்சிஸ் வங்கி பணிக்கு பட்டதாரிகள், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர் அனைவரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பை யாரும் மிஸ் பண்ண வேண்டாம்.
இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள Financial literacy counsellor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் , தகுதியும் உள்ளவர்கள் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்தியாவில் தற்போது கனரா உள்ளிட்ட பிற பொதுத்துறை வங்கிகளில் முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் வங்கிகளில் பணிபுரிவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளில் தரப்படும் சலுகைகள், எளிய முறையில் மக்கள் பணம் எடுப்பதற்கு உதவுவது போன்ற பல்வேறு சேவைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுப்போன்று பணி ஓய்வு காலத்தில் வங்கிகளில் பணிபுரிவதற்கான வாய்ப்பினை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் பணிபுரிவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Financial literacy counsellor பணிக்கான இந்த அறிவிப்பில் தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Financial literacy counsellor பணிக்கான தகுதிகள்:
இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் Financial literacy counsellor ஆக பணிபுரிய வேண்டும் எனில், விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வங்கிப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
கணினியில் பணிபுரிவது குறித்த அடிப்படை தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், வங்கியில் பணிபுரிவதற்கான ஆர்வம் உள்ள நபர்கள், முதலில் https://www.iob.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் இப்பணிக்காக கேட்கப்பட்டிருக்கும் சான்றிதழ்களையெல்லாம் விண்ணப்பத்தோடு அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
The chief Regional manager,
Indian overseas bank,
Regional office MG road,
Trivandrum – 695001
தேர்வு முறை : விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்டு தகுதியுள்ள நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சம்பளம் -ரூ.12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே பட்டதாரிகள், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர் அனைவரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பை யாரும் மிஸ் பண்ண வேண்டாம். மேலும் கூடுதல் விபரங்களை http://www.iob.in அல்லது http://www.iob.in/upload/CEDocuments/FLCC_Recruitment என்ற பக்கத்தில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.