மேலும் அறிய

NLC Apprentice 2023 : பிரபல நிறுவனத்தில் அப்ரண்டிஷிப் வாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் இங்கே!

NLC Apprentice 2023 : நெய்வேலி பழுப்பு நிலக்கரி காப்பரேஷனில் தொழில்பயிற்சி காத்திருக்கிறது. விண்ணப்பிப்பது குறித்த முழு விவரம் இக்கட்டுரையில் காணலாம்.

அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி காப்பரேஷன் (Neyveli lignite corporation) நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஷிப் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொறியியல் துறையில் பட்டப்படிப்பு மற்றும் டெக்னீசியன் உள்ளிட்ட வேலைகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான 318 பணியிடங்கள்,  டெக்னீசியன் வேலைகளுக்கான 308 பதவிகள் என Apprentice-ஆக தேர்தெடுக்கப்பட உள்ளன. 

விவரம்:

 


NLC Apprentice 2023 : பிரபல நிறுவனத்தில் அப்ரண்டிஷிப் வாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் இங்கே!

கல்வி தகுதி:

இந்த பதவிகளுக்கு விண்ணபிக்க, இஞ்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப பட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2020, 2021, 2022 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். ஓராண்டு அல்லது அதற்கு மேல் பணியில் முன் அன்பவம் இருப்பவர்கள் இதற்கு விண்ணபிக்க தகுதியானவர்கள் இல்லை. விண்ணப்பதாரர் தற்போது எந்த வேலையிலும், என்.எல்.சி. நிறுவனத்திலோ பணி செய்பவராக இருத்தல் கூடாது. 

பயிற்சி காலம்: 

இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஓராண்டு காலம் பயிற்சி வழங்கப்படும்.

ஊக்கத்தொகை: 

பட்டப்படிப்பு - ரூ.15,028

டிப்ளமோ - ரூ.12,545

விண்ணபிக்க கடைசி தேதி: 31.01.2023

எப்படி விண்ணப்பிப்பது:

https://www.nlcindia.in/new_website/index.htm என்ற இணையதளத்தில் Careeers பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய நகல்கள்:

  1. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் (Hsc Mark sheet)
  2. கல்வி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
  3. சாதி சான்றிதழ் (Community Certificate (in case of belonging to SC / ST / OBC / EWS).
  4. டிப்ளமோ, பட்ட படிப்பு தேர்ச்சி டிகிரி சான்றிதழ் (Degree Certificates / Diploma Certificate /Provisional Certificate)
  5. Consolidated mark sheet (or) Semester – wise Mark sheet
  6. மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான சான்றிதழ் (Proof for Physically with Disabled person (PwD) (if applicable))
  7. முன்னாள் இராணுவத்தினர் சான்றிதழ் (Proof for wards of Ex-Serviceman (if applicable))

உள்ளிட்ட சான்றிதழ்களை ஸ்கேன் செய்து விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். 

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் தகுதி உள்ளவர்கள் இணைக்கப்பட்டுள்ள சான்றிதழ்கள் சரிபார்த்தலின் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு Selected List of candidates யல் நிலம் எடுப்பு அலுவலக தகவல் பலகை, கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் தகவல் பலகையிலும் மற்றும் www.nlcindia.in என்ற இணையதளத்திலும் உத்தேசமாக 23.09.2022 அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க 23.01.2023  காலை 10.00 மணி முதல் 31.01.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் www.nlcindia.in  என்ற இணையதளத்தில் ஆன்லைனில் இருக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்படிவத்தினை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்.

 கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய நகல்களை இணைத்து 31.02.2023 மாலை 5.00 மணிக்குள் அஞ்சல் அனுப்ப வேண்டும்.

 

முகவரி:

பொது மேளாளர்

நிலம் எடுப்பு அலுவலகம் எ

என்.எல்.சி.இந்தியா நிறுவனம்,

நெய்வேலி-607803.

Office of the General Manager,
Land Acquisition Department,
N.L.C India Limited.
Neyveli – 607 803

  பயிற்சி தேர்வு முறை குறித்து விண்ணப்பதாரர்களுடன் கடித போக்குவரத்து எதுவும் நடைபெறாது என்றும், யிற்சி தேர்வு குறித்தான தகவல்களுக்கு விண்ணப்பதரர்கள் அனைவரும் நிலம் எடுப்பு துறை அலுவலகத்தினை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. NLCILல் நிரந்தர வேலைவாய்ப்பிற்கான உத்திரவாதம் ஏதும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://www.nlcindia.in/new_website/careers/ATS%20Engagement%20of%20Apprentices-%20Adverisement.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

“10-ம் வகுப்பு போதும்... அரசு வேலை ரெடி! TNPSC குரூப் 4-ல் 6,574 காலியிடங்கள் – ஜனவரி 10-ல் தேர்வு!”
“10-ம் வகுப்பு போதும்... அரசு வேலை ரெடி! TNPSC குரூப் 4-ல் 6,574 காலியிடங்கள் – ஜனவரி 10-ல் தேர்வு!”
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
TNPSC Group 4: “கடல் அளவு தேவைக்கு கடுகளவு உதவி!” - குரூப் 4 பணியிட அறிவிப்பை விளாசிய டிடிவி தினகரன்
TNPSC Group 4: “கடல் அளவு தேவைக்கு கடுகளவு உதவி!” - குரூப் 4 பணியிட அறிவிப்பை விளாசிய டிடிவி தினகரன்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Embed widget