Job Alert: டிகிரி முடித்தவரா? தகுதித் தேர்வுகள் இல்லை - வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் விவரம் இதோ!
Job Alert: நேஷனல் சீட்ஸ் கார்ப்ரேசன் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடை தேதியாகும்.
நாகப்பட்டினம் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ள பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர்
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
MS Office தெரிந்திருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் இருப்பது சிறந்தது.
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.12,000 வழங்கப்படும்.
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 45-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு விண்ணப்பிக்க பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட ஆட்சியரக வளாகம்
மாவட்ட ஆட்சியரக வளாகம்
முதல் நுழைவாயில்
நாகப்பட்டினம் - 611 003
தொடர்புக்கு - 04365 253036
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 02.10.2023
இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2023/09/2023092080.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
நேஷனல் சீட்ஸ் கார்ப்ரேசனில் வேலை
மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
- ஜூனியர் அதிகாரி
- ஜூனியர் அலுவலர்
- மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்
- பயிற்சியாளர் (வேளாண்மை)
- பயிற்சியாளர் (மார்க்கெட்டிங்)
- பயிற்சியாளர் (க்வாலிட்டி கன்ட்ரோல்)
- பயிற்சியாளர் (ஸ்டெனோகிராஃபர்)
- பயிற்சியாளர் (வேளாண் ஸ்டோர்ஸ்)
மொத்த பணியிடங்கள்: 89
கல்வித் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு பி.எஸ்.சி. வேளாண் படிப்பு, இளங்கலை பொறியியல், பி.டெக். உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
ஜூனியர் அலுவலர் - ரூ.22,000 -77,000
மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் - ரூ.55,680
பயிற்சியாளர் - ரூ.23,664
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
https://www.indiaseeds.com/ - என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.09.2023
வயது வரம்பு, தேர்வு தேதி உள்ளிட்டவை குறித்த கூடுதல் தகவலுக்கு https://www.indiaseeds.com/career/2023/NSC2023Rec/Rec202308.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.