Job Fair: வரும் 16-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்; எங்கே? எப்போது? - முழு விவரம்!
Job Fair: வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்களின் விவரம் குறித்த முழு விவரங்களை காணலாம்.
மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தருமபுரி, சேலம், நீலகிரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை / 16.02.2024) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்களின் விவரம் பின் வருமாறு..
தருமபுரி
கடகத்துரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (Governement I.T.I , Kadagathur) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 வரை முகாம் நடைபெறும்.
சேலம்
அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம். - காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை
முகவரி: District Employment & Career Guidance Centre, Yercaud Main Road, Gorimedu, Salem- 8
காஞ்சிபுரம்
திருமலை பாலிடெக்னிக் கல்லூரி, கீழம்பி காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 வரை முகாம் நடைபெறுகிறது.
நீலகிரி
அரசு பாலிடெக்னிக் கல்லூரி - உதகைமண்டலம். காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை
https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/112402070012 - என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த முகவரியின் QR -கோட் பெறலாம்.
முன்னணி நிறுவனங்கள்
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள். பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள், பிட்டர், டர்னர், வெல்டர். சி.என்.சி. ஆப்ரேட்டர், போன்ற ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in - என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
வேலைதேடும் இளைஞர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/ca_login -வாயிலாக பதிவு செய்யலாம்.
ஆன்லைனில் பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் வாசிக்க..
Indian Coast Guard Recruitment: கடலோர காவல்படையில் வேலை;ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் - முழு விவரம்!