மேலும் அறிய

UPSC CSE Notification: வெளியான அறிவிப்பு; 1056 காலியிடங்கள்- யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?

UPSC Civil Services Notification 2024: யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி உள்ள நிலையில், எப்படி விண்ணப்பிக்கலாம் என்று காணலாம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட அரசின் உயரிய நிர்வாகப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், மார்ச் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதல்நிலைத் தேர்வு மே 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)  சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு ஐஇஎஸ் (IES) தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. 

வயது வரம்பு

தேர்வர்கள் குறைந்தபட்சம் 21 வயதில் இருந்து, 32 வயது வரை இருக்கலாம். எனினும் சமூக அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

என்ன தகுதி?

பட்டப் படிப்பை முடித்த யார் வேண்டுமானாலும் யுபிஎஸ்சி தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புவோர் https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

அதில், முதல் முறையாக விண்ணப்பிக்கும் தேர்வர்கள், பெயர், பாலினம், பிறந்த தேதி, தந்தை, தாய் பெயர், மொபைல் எண், இ- மெயில் முகவரி உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை உள்ளிட்டு, முன்பதிவு செய்ய வேண்டும்.

ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள், இ – மெயில் முகவரி, மொபைல் எண், ஒரு முறை பதிவு எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவிட்டு, ஓடிபியை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும்.  

முக்கியத் தகவல்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய நகரங்களில் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெறும்.

அனுமதிச் சீட்டு https://upsconline.nic.in என்ற இணையப் பக்கத்தில் வெளியிடப்படும். அதைத் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தபாலில் எந்த அனுமதிச் சீட்டும் வெளியிடப்படாது. விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்யும் புகைப்படம், சமீபத்திய ஒன்றாக இருக்க வேண்டும். குறிப்பாக அறிவிக்கை வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்க வேண்டும்.

முழு தகவல்களுக்கு https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-24-engl-140224.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, முழு அறிவிக்கையைக் காணலாம். 

கூடுதல் விவரங்களுக்கு: 011-23385271/ 011-23381125/ 011-23098543 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

யுபிஎஸ்சி இணையதள முகவரி: https://upsc.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Embed widget