மயிலாடுதுறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி வாய்ப்பு - என்ன பணி தெரியுமா?
மயிலாடுதுறையில் TNPSC, TNUSRB தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்காக பயிற்றுநர்கள் தேர்வு ஏப்ரல் 22 -ம் தேதி நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வழிகாட்டுதலுடன், TNPSC Group 1, Group 4 மற்றும் TNUSRB SI உள்ளிட்ட அரசுத்துறை வேலைவாய்ப்பு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட உள்ளன. இவ்வகுப்புகளின் சிறப்பான முன்னெடுப்பிற்காக, மாணவர்களுக்கு திறமையான பயிற்சியை வழங்கும் வகையில் தகுதியும், அனுபவமும் கொண்ட பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆட்சியரின் செய்திக்குறிப்பு
இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வழிகாட்டுதலுடன், TNPSC Group 1, Group 4 மற்றும் TNUSRB SI உள்ளிட்ட அரசுத்துறை வேலைவாய்ப்பு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட உள்ளன. இவ்வகுப்புகளின் சிறப்பான முன்னெடுப்பிற்காக, மாணவர்களுக்கு திறமையான பயிற்சியை வழங்கும் வகையில் தகுதியும், அனுபவமும் கொண்ட பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பயிற்றுநருக்கு மதிப்பூதியம்
இந்த பயிற்சி வகுப்புகளில் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கு அரசு விதிமுறைகளின் கீழ் மதிப்பூதியம் வழங்கப்படும். பயிற்றுநர்களாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், விரிவான பாடக்குறிப்புகள், PowerPoint பிரசண்டேஷன் (PPT), முந்தைய ஆண்டுகளின் தேர்வுக் கேள்வித்தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளுக்கான கேள்வி – பதில்கள் ஆகியவற்றுடன் நேர்முகத் தேர்விற்கு தயாராக இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு 22 ஏப்ரல் 2025, செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. தேர்வில் பங்கேற்க விரும்பும் பயிற்றுநர்கள், தேர்வு நாளன்று தங்களது முழுமையான பாடக்குறிப்புகள் மற்றும் பயிற்சி அளிக்கும் திறனைக் காட்டக்கூடிய பதிவுகளைத் தயாராக கொண்டு வரவேண்டும். இது அவர்களின் பாடத்திறன் மற்றும் அறிவாற்றலை மதிப்பீடு செய்ய உதவும்.
கண்ணியம் முக்கியம்; நீங்கள் ரசிகர்கள் அல்ல – தவெக ஐடி விங் கூட்டத்தில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு
மேற்கண்ட தேர்வுகளில் (TNPSC GR1, GR4, TNUSRB SI) முதன்மை தேர்வுகளுக்கு அனுபவமிக்க இளைஞர்கள் மற்றும் இளைஞிகள், பயிற்சியாளர்களாகச் சேர விரும்பினால், தங்களது சுயவிவரப் படிவத்தை studycircledeomayil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதோடு நேர்முகத் தேர்வில் நேரில் பங்கேற்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 9499055904 என்ற WhatsApp எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம். இது போன்ற முயற்சிகள் மாவட்ட இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்கும், அரசு வேலைவாய்ப்பு வாய்ப்புகளைப் பெருக்கவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.






















