KVB Job Vacancy: வங்கி வேலை வேண்டுமா? பிரபல தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு; முழு விவரம்!
KVB Job Vacancy: கரூர் வைஸ்யா வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து முழு விவரம்!
![KVB Job Vacancy: வங்கி வேலை வேண்டுமா? பிரபல தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு; முழு விவரம்! KVB Recruitment 2023 Karur Vysya Bank Invites Online Application for Relationship Manager Post Check Eligibility How to Apply KVB Job Vacancy: வங்கி வேலை வேண்டுமா? பிரபல தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு; முழு விவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/05/b9399ead3328281e31fdd22b1dbe55f31672935446226571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு:
கரூர் வைஸ்யா வங்கியானது, இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் வங்கியாகும். தமிழ்நாட்டின் கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் காலியாக உள்ள 'Relationship Manager' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்:
Sales பிரிவில் காலி பணியிடங்கள் இருப்பதாக கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
Relationship Manager
கல்வித் தகுதி :
குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். விற்பனைப் பிரிவில் ஆர்வம் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
இதற்கு வங்கியில் கொள்கை, திறமை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு :
இதற்கு அதிகபட்சமகா 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
கட்டணம் இல்லை
விண்ணப்பிப்பது எப்படி:
- கரூர் வைஸ்யா வங்கியின் இணையதளமான Karur Vysya Bank - KVB-க்கு செல்லவும்.
’Career ‘என்பதை தேர்வு செய்யவும். - அறிவிப்புகளை படித்து தெரிந்த பின்னர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
கடைசி தேதியான ஜனவரி- 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும். - விண்ணப்பித்த பின்னர், விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- விண்ணப்பங்கள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, கரூர் வைஸ்யா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்; அல்லது https://www.kvb.co.in/ லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2023
அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு https://drive.google.com/file/d/1cdJ1EGylrfBTulrl7RJGHE046vlb2LtB/viewஎன்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.
கவனிக்க..
விண்ணப்பதாரர்கள் தங்களது தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை சரியாக கொடுக்கவும்.
நேர்காணலுக்கான அழைப்பு மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க ஆங்கிலம், மற்றும் தமிழ் மொழியில் நன்கு பேச எழுத தெரிந்திருக்க வேண்டும்.
இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் தமிழ்நாட்டில் உள்ள கரூர் வைஸியா வங்கியின் கிளைகளில் நியமிக்கப்படுவர்.
இதையும் வாசிக்க..
TNPSC Jobs : அரசு துறையில் வேலை; மாதம் இவ்வளவு ஊதியமா? நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிங்க!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)