மேலும் அறிய

Rural Skill Development Scheme: 70% பேருக்கு வேலை உத்தரவாதம்.. அரசு வழங்கும் இலவச திறன் பயிற்சி.. எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

Rural Skill Development Scheme: தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கெளசல்ய யோஜனா’ (Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana) என்ற திட்டம் கிராமபுற பகுதிகளிலுள்ள இளைஞர்கள் தொழில் தொடங்க பயிற்சி அளிக்கிறது.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் சேவை துறையின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு தேவையான திறன் பயிற்சி அளித்து தொழில் மற்றும் சேவைத் துறைக்கு மாற்றம் செய்யும் வகையில் மத்திய / மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

அதில், மத்திய ஊரக அமைச்சகத்தின் தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கெளசல்ய யோஜனா’ (Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana) என்ற திட்டம் கிராமபுற பகுதிகளிலுள்ள இளைஞர்கள் தொழில் தொடங்க பயிற்சி அளிக்கிறது. இதை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செய்து வருகிறது. 

திட்டத்தின் விவரம்:

பயிற்சிக்குரிய பாடத்திட்டமானது தேசிய திறன் தகுதி குழுமத்துடன் (National Skill Qualification Framework – NSQF) இணைந்த முறையிலும், அவற்றோடு மென்திறன்களான ஆங்கில அறிவு, அடிப்படை கணினி அறிவு ஆகிய பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி முடிக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் கூடுதலாக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 

இதற்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் பல்வேறு துறைகளில் இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பெறலாம். பயிற்சி பெற்றவர்கள் குறைந்தபட்சம் 70 சதவீதம் பேர் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியமர்த்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடும் இது செயல்பட்டு வருகிறது. 

  • விண்ணப்பதாரர்கள் கிராமப்புற BPL பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
  • VPRC ஆல் பராமரிக்கப்படும் ஏழைகளின் பங்கேற்பு அடையாள (PIP) பட்டியலில் இருந்து ஏழைகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • MGNREGA குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள், முந்தைய நிதியாண்டில் குறைந்தது 15 நாட்கள் வேலை.
  • அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) அட்டை வழங்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள்.
  • TNSRLM இன் கீழ் SHG இல் ஒரு குடும்ப உறுப்பினர் உறுப்பினராக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள்.
  • SECC 2011 இன் படி, தானாகச் சேர்க்கும் அளவுருக்களுக்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள்.

கௌஷல் பன்ஜியில் பதிவு செய்தல்: DDU-GKY

விண்ணப்பதாரர்களை பதிவு செய்ய "கௌஷல் பாஞ்சி" என்ற திறன் பதிவேடு மொபைல் செயலி வடிவில் உள்ளது. SECC தரவின் தற்போதைய விவரங்களைப் பயன்படுத்தி அல்லது புதிய வேட்பாளராக விவரங்களை உள்ளிடுவதன் மூலம் வேட்பாளர் அவரை/அவளைப் பதிவு செய்யலாம்.

கௌஷல் பஞ்சியில் இளைஞர்களின் விவரங்களைப் பதிவு செய்வதன் மூலம், அருகிலுள்ள அணிதிரட்டல் முகாம்கள், பயிற்சி மையங்கள், வேலை மேளாக்கள் மற்றும் பேட்ச்களின் தொடக்கம் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கலாம்.

பயிற்சியாளர்களுக்கான உரிமைகள்:

  • அனைத்து விண்ணப்பதாரர்களும் இலவசமாக பயிற்சி பெறுவார்கள்.
  • அனைத்து குடியிருப்பு பயிற்சியாளர்களுக்கும் இலவச தங்கும் விடுதியும் வழங்கப்படும்.
  • குடியிருப்பு அல்லாத பயிற்சி பெறுபவர்களுக்கு பயணப்படியாக ஒரு நாளைக்கு ரூ.125/- வழங்கப்படும்.
  • பயிற்சி தொடங்கிய 10 நாட்களுக்குள் அனைத்து விண்ணப்பதாரர்களும் சீருடை பெறுவார்கள்.
  • அனைத்து விண்ணப்பதாரர்களும் பணிப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பிற ஆய்வுப் பொருட்கள் உட்பட பயிற்சிப் பொருட்களை இலவசமாகப் பெறுவார்கள்.
  • பயிற்சியின் முடிவில் அனைத்து விண்ணப்பதாரர்களும் DDU-GKY திறன் பயிற்சி சான்றிதழைப் பெறுவார்கள்.

வேலை வாய்ப்பு:

குறைந்தபட்சம் 70% பயிற்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு உட்பட வேலை வாய்ப்பு உத்தரவாதம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூடுதல் விவரங்களை https://kaushalpanjee.nic.in/- என்ற லிங்கை கிளிக் செய்யவும். மேலும், தமிழ்நாட்டில் இதன் விண்ணப்பிக்க 

https://tncdw.org/pages/view/Contact-Us- என்ற இணைப்பில் காணலாம்.

முகவரி: 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை,

அன்னை தெரசா மகளிர் வளாகம் முதல் தளம் ,
வள்ளுவர் கோட்டம் உயர்நிலை சாலை, நுங்கம்பாக்கம்,
சென்னை-600 034,தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி:91-44-28173412

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Embed widget