மேலும் அறிய

Job Alert: அரசு மருத்துவ மருத்துவமனையில் பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம்!

Job Alert: இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பது எப்படி என காணலாம்.

கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் (Assitant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தர மேலாளர் பணிக்கும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். https://krishnagiri.nic.in/ta/ - என்ற இணையதள முகவரில் மேலதிக விவரங்களை காணலாம்.

பணி விவரம் 

உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் (Assitant Cum Data Entry operator)

கல்வித் தகுதி

  • 12-ம் வகுப்பு தேர்ச்சி . அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் கணினி பட்டயப்படிப்பு முடித்து சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். 
  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு (உயர்நிலை) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி இயக்குவதில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

இந்தப் பணி தொகுப்பூதியம் அடிப்படையிலானது. ரூ.11,916 மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்வி சான்றுகள், அனுபவச் சான்றிதழ்களின் நகல்களுடன் அஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 

99,100 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம்,

கிருஷ்ணகிரி - 635 115 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.01.2024

https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2023/12/2023121983.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மகளிருக்கான வேலைவாய்ப்பு

சென்னை, பாடியிலுள்ள லூகாஸ் டி.வி,எஸ்.  நிறுவனத்தின் உற்பத்தி பிரிவில் பயிற்சி பணியாளர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

பாடி லூகாஸ் கிளைக்கு கலை மற்றும் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு உற்பத்தி பிரிவில் பயிற்சி பணியாளர்களுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

தொழிற்சாலையில் இருந்து 10கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

உதவித்தொகை

இதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சி பணியாளர்களுக்கு தகுதிக்கேற்ப மாஹம் ரூ.15,000 முதல் ரூ.16,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

PF, ESI, Canteen, சீருடை, பாதுகாப்பு ஷூ, மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவை செய்து தரப்படும். 

விருப்பமுள்ளவர்கள் நேர்காணலுக்கு, அனைத்து சான்றிதழ்களுடன் 2 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் கார்டு நகல்கள் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

லூகாஸ் டி.வி.எஸ். லிமிடெட்,

பாடி, 

சென்னை - 600 050

தொடர்புக்கு - 7358105162 / 9003585772 

12.01.2024 வரை நேர்காணலுக்கு செல்லலாம்.

2250 பணியிடங்கள்; ரயில்வே துறையில் வேலை

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் சப்- இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், ரயில்வே பாதுகாப்பு துறை, ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ஆகிய பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.  மேலும் வாசிக்க..

IAF Recruitment 2022: இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு, அதாவது போர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி,6-ம் தேதி கடைசி நாளாகும். அதோடு, பணியிட தேவையை பொறுத்து பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Embed widget