Post Office Jobs | அஞ்சல் துறையில் குவியும் வேலைவாய்ப்புகள் : 10-வகுப்பு தேர்ச்சியே தகுதி.. உடனே அப்ளை பண்ணுங்க..
அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல்துறையில் Gramin Dak Sevak, Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM) and Dak Sevaks என 266 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் வருகின்ற அக்டோபர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதுமுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் தபால்களையும் கொண்டு சேர்ப்பது முதல் அனைத்துத் தரப்பட்ட மக்களும் தங்களி்ன் பணத்தைச் சேமித்து வைப்பது முதல் பல்வேறு பணிகளை அஞ்சல் துறை சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. மத்திய அரசு பணியான இந்த அஞ்சல் துறையின் கீழ் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அதற்கேற்றால் போல் தான் தற்போது இந்திய அஞ்சல் துறையில் Gramin Dak Sevak, Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM) and Dak Sevaks பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.
அஞ்சல் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கானத் தகுதிகள்.
கல்வித்தகுதி : Gramin Dak Sevak, Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM) and Dak Sevaks பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பள விபரம்:
Gramin Dak Sevak பணிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம்
Branch Postmaster (BPM) பணிக்கு ரூ.12 ஆயிரம் முதல் 14, 400
Assistant Branch Postmaster (ABPM) பணிக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம்
Dak Sevaks பணிக்கு ரூ.10 முதல் ரூ.12 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை ஜிடிஎஸ் ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் முறை:
இந்திய தபால் துறையில் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் முதலில் இந்திய அஞ்சல் துறையின் https://drive.google.com/file/d/183uq-ldTDI1RvHQTpy89yI6sMjZv1xl2/view என்ற அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்திற்கு செல்லவும்.
பின்னர் முகப்பு பக்கத்தில், உங்களுடைய சுய விபரங்களை பதிவு செய்யவும். (register yourself)
இதனையடுத்து கேட்கப்பட்டிருக்கும் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தும் ஆப்சன் இருக்கும். எனவே அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதோடு அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களுடன் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். பின்னர் உங்கள் ஆவணங்களை பதிவேற்றவும் மற்றும் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இறுதியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதன் நகலை எதிர்காலப் பயன்பாட்டிற்காக வைத்திருக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப படிவத்தில் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட வேண்டும். இல்லையென்றால் புதிதாக இதனை உருவாக்க வேண்டும்.
எனவே ஆர்வமுமம் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இன்னும் 2 நாள்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்குறித்த கூடுதல் விபரங்களை https://drive.google.com/file/d/183uq-ldTDI1RvHQTpy89yI6sMjZv1xl2/view என்ற இணையதள வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.