Infosys Careers: இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? வாய்ப்புகள் காத்திருக்கிறது! இதைப் படிங்க!
வேலை வரும் வேளையில் அதை தவறவிடாதீங்க.இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை காத்திருக்கிறது.!
நாட்டின் முன்னணி தொழிநுட்ப சேவை வழங்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் யாருக்குத்தான் ஆசையிருக்காது? அப்படியென்றால், உங்களுக்கான வேலைவாய்ப்பு செய்தி இதோ!
இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளிட்டுள்ள வேலைவாய்ப்பு செய்தியில், Process Executive என்ற பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
Infosys's new Code of Conduct and Ethics — Digital Version, sets out our core values & shared responsibilities. Be part of our #digitaltransformation & experience the Code. https://t.co/qiwShlDu4B pic.twitter.com/DhAIqhQaSl
— Infosys Careers (@InfosysCareers) April 27, 2022
இந்த பணிக்கு முன் அனுபவம் ஏதும் தேவையில்லை என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்கள் வெளியிடப் பணி நிறுவனச் சேவையில் (பிபிஒ) பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10, 12 மற்றும் பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
திறன்கள்:
SLA-Service-level agreement யல்முறைகள், வளர்ச்சிக்கான திட்டமிடல், மற்றும் வணிக மேம்பாட்டிற்கான செயல்முறைகளை அடையாளம் காணுதல் ஆகியவற்றை அணுகும் நபராக இருக்க வேண்டும். எதிர்கொள்ளும் துரிதமாகவும் தெளிவாகவும் முடிவெடுக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். எழுத்து மற்றும் பேச்சு ஆகியவற்றில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் இருக்க வேண்டியது கட்டாயம்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
https://career.infosys.com/jobdesc?jobReferenceCode=PROGEN-External-121715&source=44003
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்காலத் தேவைகளுக்காக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இந்த வேலைவாய்ப்புக்கான பணி இடம், அதன் தேவையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் என்றும் இன்ஃபோசின் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
50,000 இளைஞர்களை பணியமர்த்த இன்போசிஸ் திட்டம்:
இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனம் வரும் நிதியாண்டில் 50,000க்கும் மேற்பட்ட அனுபவம் இல்லாத (Fresher's) இளைஞர்களை பணியமர்த்த முடிவெடுத்துள்ளது. முன்னதாக, இன்ஃபோசிஸ் நிறுவனம், 2022 நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை வெளியிட்டது. 2022 நிதியாண்டில், நிறுவனத்தின் டிஜிட்டல் ( உதாரணமாக, Cloud computing) சந்தையின் மதிப்பு 41.2% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது,கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 38.8 சதவீத நேர்மறையான வளர்ச்சியாகும். நான்காவது காலாண்டில் அதன் நிகர லாபம் 5,686 கோடியாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்