இந்து சமய அறநிலையத்துறையில் வேலை செய்ய விருப்பமா? உடனடியாக முந்திக்கோங்க...!
இந்து சமய அறநிலையத்துறைக்கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 44,218 கோயில்கள் இயங்கி வருகின்றனர். இவை அனைத்தையும் நிர்வகிக்க, கூடுதல் ஆணையர் (விசாரணை), கூடுதல் ஆணையர் (திருப்பணி), இணை ஆணையர் (தலைமையிடம்), இணை ஆணையர் (சட்டச்சேர்மம்), இணை ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்), இணை ஆணையர்(சரிபார்ப்பு-தலைமையிடம்), உதவி ஆணையர் (சட்டச்சேர்மம்), உதவி ஆணையர் (கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீ்ழ் பலர் பணியாற்றி வருகின்றனர். இதோடு இந்து சமய அறநிலையத்துறையின் கல்லூரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கானப் பயிற்சிப்பள்ளி இயங்கிவருகிறது.
இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு இந்து மதத்தைச்சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேறு என்னென்ன நிபந்தனைகள்? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
இந்து சமய அறநிலையத்துறைப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதிகள்:
காலிப்பணியிட விபரங்கள்:
தலைமைஆசிரியர் – 1
ஆகம ஆசிரியர் – 1
எழுத்தர் – 1
சமையல்காரர் – 1
சமையல் உதவியாளர் – 1
விண்ணப்பிக்கும் முறை:
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வைணவப்பள்ளியில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள நபர்கள், https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர் ,
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் ,
ஸ்ரீ பெரும்புதூர் - 602 105,
காஞ்சிபுரம் மாவட்டம்.
குறிப்பு: மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, நிபந்தனைகள் போன்ற இதர விபரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் வந்து கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம். மேலும் இந்து மதத்தைச்சேர்ந்தவர்கள் மட்டும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளது.
தேர்வு முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சம்பள விபரம்:
தலைமை ஆசிரியர் – ரூ.35 ஆயிரம்
ஆகம ஆசிரியர் – ரூ. 30 ஆயிரம்
எழுத்தர் – ரூ.10 ஆயிரம்
சமையல்காரர் – ரூ.12 ஆயிரம்
சமையல் உதவியாளர் – ரூ.10 ஆயிரம்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.