Grade II Police Constable: 2-ஆம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு...
2022-ஆம் ஆண்டுக்கான 2-ஆம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.
தமிழ்நாட்டில் இரண்டாம் நிலைக் காவலர் , இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்தான தகவலை tnusrb.tn.gov.in. என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம
காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியிட்டது.
இதன் கீழ், ஆயுதப்படை காவலர்கள், 1,091 தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் 161 இரண்டாம் நிலை சிறை காவலர்கள், 120 தீயணைப்பு வீரர்கள் என, மொத்தம் 3552 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக, 2,99,887 ஆண்கள், 66,811 பெண்கள் மற்றும் 59 திருநங்கைகள் என மொத்தம் 3 லட்சத்து 66,727 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், மற்றும் தீயணைப்பு வீரர் என 3,552 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் 295 மையங்களில் நடைபெற்றது.
தமிழ் மொழி, பொது அறிவு, உளவியல் ஆகிய பகுதிகளில் இருந்து 150 வினாக்களுக்கு தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை எழுத 2,99,887 ஆண்கள், 66,811 பெண்கள் மற்றும் 59 மூன்றாம் பாலினத்தவர்களும் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 2,99, 820 பேர் மட்டுமே தேர்வு எழுத, 66,908 பேர் தேர்வை எழுதவில்லை. அதாவது தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 81.76% பேர் தேர்வு எழுத, 18.24% பேர் தேர்வை எழுதவில்லை.
இந்நிலையில் 2023 ஆண்டுக்கான தமிழ்நாடு இரண்டாம் நிலைக் காவலர் , இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் குறித்து பட்டியலை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
View this post on Instagram
Also Read: CRPF Recruitment : 9,212 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்?