மேலும் அறிய

CRPF Recruitment : 9,212 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்?

CRPF Recruitment : மத்திய அரசின் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் வேலைவாய்ப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் (The Central Reserve Police Force (CRPF) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. சி.ஆர்.பி.எஃப் இல் காலியாக உள்ள 9,212 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9,105 பணியிடங்களுக்கு ஆண்களும், 107 இடங்களுக்கு பெண்களையும் தேர்வு செய்ய இருக்கின்றனர்.இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பது பற்றி கீழே காணலாம். 

பணி விவரம்: 

கான்ஸ்டபிள் (Constable (Technical & Tradesmen))

ஓட்டுநர், மோட்டர் மெக்கானிக், கார்பெண்டர், டெய்லர், தோட்ட பணியாளார், பெயிண்டர், சமையலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புன் மூலம் நிரப்பப்பட உள்ளது.

மொத்த பணியிடங்கள்:  9,212

கல்வித் தகுதி: 

  • ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்கு பத்தாவது அல்லது +2 தேர்ச்சி போதுமானது. ஓட்டுநர் உரிமம் அவசியமானது.
  • டெக்னிக்கல் பணிகளுக்கு விண்ணப்பிக்க அதற்கேற்ற தகுதி இருக்க வேண்டும். 
  • மெக்கானிக் பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சியோடு  ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • மற்ற ட்ரேட்ஸ்மேன் பணிகளுக்கு பத்தாவது அல்லது +2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • எலக்ட்ரிசியன் பணிக்கு பணி அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு: 

டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க 27 வயதுக்கு மிகாமல் இருத்தக் கூடாது. அரசு விதிகளின் படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: 

 இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்ப கட்டணம்: 

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், பெண்கள் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட டிஜிட்டல் முறையிலும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: 

இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் கம்ப்யூட்டர் தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் தீர்வுகள் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் சி.ஆர்.பி.எஃப் இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  https://crpf.gov.in/- என்பது அதிகாரப்பூர்வ வலைதள முகவரியாகும்.

முக்கியமான தேதிகள்:

CRPF Recruitment : 9,212 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்?

 

இந்தப் பணி குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ATTACHMENTS/263_1/1_145032023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • இதற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான http://rect.crpf.gov.in/ -பக்கத்திற்கு செல்லவும்.
  • ஹோம் பக்கத்தில் உள்ள 'Applying to the various post of (Technical & Tradesman) in CRPF’ என்பதை க்ளிக் செய்யவும்.
  • தேவையான தகவல்களைப் பதிவிட்டு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும். 
  • விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
  • விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வைத்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.04.2023


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 67 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 67 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
JIPMER வேலைவாய்ப்பு: ரூ.61,600 வரை சம்பளம்... B.Pharm, B.Sc Nursing, PG படித்தவர்கள் கவனத்திற்கு!
JIPMER வேலைவாய்ப்பு: ரூ.61,600 வரை சம்பளம்... B.Pharm, B.Sc Nursing, PG படித்தவர்கள் கவனத்திற்கு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்: ஈசியா வேலை பெற பொன்னான வாய்ப்பு!
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்: ஈசியா வேலை பெற பொன்னான வாய்ப்பு!

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Embed widget