மேலும் அறிய

IAF Agniveer Recruitment 2023 : அக்னிவீர் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? நாளையே கடைசி; உடனே அப்ளை பண்ணுங்க!

IAF Agniveer Recruitment 2023: விமானப் படையின் அக்னி வீர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க நாளையே இறுதிநாள்!

IAF Recruitment 2022: இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு, அதாவது போர் அல்லாத பணியிடங்களுக்கு பணியாற்ற மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை  வெளியிட்டிருந்தது. இந்திய விமானப் படை பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க  நாளை (மார்ச்,31) கடைசி நாள். இதற்கு திருமணம் ஆகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பணியிட தேவையை பொறுத்து பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பமாக உள்ள பெண்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டம் என்றால் என்ன?

அக்னி பாதை திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர். 

அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.

பணி விவரம்: 

அக்னிவீர்வாயு பணியாளர்கள்

கல்வித் தகுதி: 

இதற்கு விண்ணப்பிக்க 10+2 என்ற முறையில் பள்ளிக் கல்வி முடித்திருக்க வேண்டும். 

வேதியியல், இயற்பியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

+2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டு. 

 மூன்று ஆண்டுகள் பொறியியலில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் வோக்கேசனல் டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 முதல் 23 வயது வரை இருக்க வேண்டும்.வயது வரம்பு குறித்த முழு விவரத்தை அறிவிப்பில் https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_02-2023.pdf-தெரிந்துகொள்ளலாம். 

ஊதிய விவரம்: 

இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும். 

அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி

இதற்காக இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது மொத்த ராணுவப் படைகளில் 3 சதவீதம் மட்டுமே. இதனால் ராணுவத்தின் பிற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.  

தேர்வு செய்யும் முறை: 

  • உடல் திறன் சோதனை
  • எழுத்து தேர்வு
  • மருத்துவ பரிசோதனை
  • நேர்முக தேர்வு
  • ஆவணங்கள் சரிபார்ப்பு

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in -என்ற இணையதளத்தில் அணுகலாம். வேலைவாய்ப்பு அறிவிப்பில் கொடுத்துள்ள ஆவணங்கள் உடன் தகுதியுடைவா்கள் இதில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_02-2023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

இந்த வேலைவாய்ப்பிற்கு மே, 20-ஆம் தேதி முதல் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும் Home - Indian Air Force: Touch The Sky With Glory
  • முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டும் விண்ணப்பிக்கவும்
  • தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவும்
  • இறுதியாக முழு விண்ணப்பம் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும்
  • துணைக் காவலர் அறை, விமானப்படை தாம்பரம், தாம்பரம் கிழக்கு, சென்னை -- 600 046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2023

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Embed widget