மேலும் அறிய
Advertisement
Job Alert: ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை; ரூ.23 ஆயிரம் ஊதியம்- விண்ணப்பிக்க தகுதிகள் என்ன? விவரம்!
Job Alert: காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் நல வாழ்வுச் சங்கம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
- Physiotherapists
- சமூகப் பணியாளர்
- Data Entry Operator
- MMU ஓட்டுநர்
- MMU Attender cum Cleaner
- Vaccine Cold Chain Manager
- மருத்துவமனை பணியாளர்
- Mid - Level Health Provider
- பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்
கல்வித் தகுதி:
- Physiotherapists பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- சமூக பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க சோஷியாலஜி படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தரவு உள்ளீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க கம்யூட்டர் சயின்ஸ் துறையில் ஓராண்டு கால டிப்ளமோ படித்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தட்டச்சு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- எம்.எம்.யு. ஓட்டுநர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Vaccine Cold Chain Manager பணியிடத்திற்கு கம்யூட்டர் அப்ளிகேசன், சமூக அறிவியல், மருத்துவமனை நிர்வாகம் ஆகிய துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஆதரவு ஊழியர் பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Mid- level Health Provider பணியிடத்திற்கு இளங்கலை படிப்பில் நர்ஸிங் படித்திருக்க வேண்டும்.
- பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- Physiotherapists - ரூ.13,000/-
- சமூகப் பணியாளர் -ரூ.23,800/-
- Data Entry Operator- ரூ.13,500/-
- MMU ஓட்டுநர் - ரூ.13,500/-
- MMU Attender cum Cleaner - ரூ.8,500/-
- Vaccine Cold Chain Manager - ரூ.23,000/-
- மருத்துவமனை பணியாளர் - ரூ.8,500/-
- Mid - Level Health Provider - ரூ.18,000/-
- பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் - ரூ.14,000/-
விண்ணப்பிப்பது எப்படி?
https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2024/08/2024083084.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதோடு இணைக்க வேண்டிய ஆவணங்களின் நகல்களை சேர்த்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.09.2024 மாலை 5.30 மணி வரை
இந்த வேலைவாய்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2024/08/2024083084.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion