மேலும் அறிய

Job Alert: டிகிரி முடித்தவரா? தூத்துக்குடியில் வேலை; எவ்வளவு ஊதியம் - முழு விவரம்

Job Alert: தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களுக்கு உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

தூத்துக்குடியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது Protection Officer பணிக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் ஓராண்டு காலத்திற்கு  ஒப்பந்தத்தத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பணி விவரம்

இதுகுறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் இயங்கி வரும், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலகத்திற்கு குழந்தை மனநல ஆலோசகர்  (Counsellor) பணிக்கு தற்காலிக பணியிடத்தினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

இந்தப் பதவிக்கு  மாதம் ரூ.27,804/- தொகுப்பூதியம் ஓராண்டு கால ஒப்பந்தத்திற்கு 42 வயதிற்குட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி / முதுநிலை பட்டதாரிகள் (10+12+3 Pattern) உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொது சுகாதாரம், வழிகாட்டுதல் உள்ளிட்ட படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும் அல்லது  முதுநிலை பட்டயப்படிப்பு (PG Diploma in Counseling and Communication) பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்தப் பதவிகளுக்கு தேவையான ஆவணங்களுடன், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

http://www.thoothukudi.nic.in/ - என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முகவரி:

District Child Protection Officer
District Child Protection Unit
176, Muthusurabi Building
Mani nagar 2nd street, Palai Road
Thoothukudi 628 003.

தொடர்புக்கு-  0461 -2331188 

விண்ணபிக்க கடைசித் தேதி:  31.10.2023 மாலை 5.30 மணிக்கு

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி குறித்த விவரங்களை காணலாம்.

பணி விவரம்:

இணை முதன்மை மருத்துவர் (Deputy Chief Medical Officer Specialist)

வயது வரம்பு:

இதற்கு 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் பிற தகுதிகள்

இதற்கு விண்ணப்பிக்க MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் துறைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

பணி காலம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர். 

ஊதிய விவரம்:

அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.60,000 முதல் 1,80,000 வரை இதற்கு ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து கல்வித் தகுதி அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.vocport.gov.in/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

கவனிக்க..

இந்த துறைமுகத்தில் பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இணையதளத்தில் உள்ள விவரங்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary,
V.O.Chidambaranar Port Authority,
Administrative Office Building,
Harbour Estate,
Tuticorin – 628 004.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/DyCMO%20Specialist%20notification209202310361.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.11.2023 மாலை 5 மணி வரை 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இனிதான் ஆட்டமே இருக்கு" போராட்ட களத்தில் விஜய்.. பரந்தூருக்கு பறக்கும் தவெக படை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
EPS attacks Stalin;
"ஒருவழியா ஸ்டாலின் ஒத்துக்கிட்டார்"; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் - இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இனிதான் ஆட்டமே இருக்கு" போராட்ட களத்தில் விஜய்.. பரந்தூருக்கு பறக்கும் தவெக படை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
EPS attacks Stalin;
"ஒருவழியா ஸ்டாலின் ஒத்துக்கிட்டார்"; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் - இபிஎஸ்
Irunga Bhai:
Irunga Bhai: "இருங்க பாய்" குரலுக்குச் சொந்தக்காரர் இவரா? இன்ஸ்டாகிராமை அலறவிட்ட சாமானியன்!
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
Embed widget