மேலும் அறிய

CISF Recruitment 2024: +2 தேர்ச்சி போதும்; 1130 பணியிடங்கள்! சி.ஐ.எஸ்.எஃப்.-இல் பணி; விவரம்!

CISF Recruitment 2024: மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 1130 பணியிட வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரத்தை இங்கே காணலாம்.

மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 1130  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்த மாதம் 30-ம் தேதி (30.09.2024) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

கான்ஸ்டபிள் (constable), பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளதாகவும், மேலும் இது தற்காலிக பணி மட்டுமே என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய தொழ்ற்பாதுகாப்பு படை (Central Industrial Security Force) :

இந்தியாவின் முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை தான் மத்திய தொழிற்பாதுகாப்பு படை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், முன்னதாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2800 படை வீரர்களுடன், மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 1983ம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தும் உரிமை இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்றவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.   

மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள்  பணிக்கானத் தகுதிகள்:

பணி விவரம்:

கான்ஸ்டபிள் (Constable - Fireman)

மொத்த பணியிடங்கள்: 1130

பணி இட விவரம்:

தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, ஹரியானா, புது டெல்லி, மத்திய பிரதேசம், இராஜஸ்தான், பீகார், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், மணிப்பூர், திரிபுரா,  தெலங்கானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நாடு முழுவதும் மண்டலம் வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் +2  வகுப்பு அல்லது பணியிடத்திற்கு தேவையான தகுதி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டியது அவசியம் என்று அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 23 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் புகைப்படம் மூலம் தெரிந்து கொள்ளவும்.

CISF Recruitment 2024: +2 தேர்ச்சி போதும்; 1130 பணியிடங்கள்! சி.ஐ.எஸ்.எஃப்.-இல் பணி; விவரம்!
 
ஊதிய விவரம்:

 5-வது லெவல் ஊதிய வரைவின் ( Pay Level-3 ) படி  ரூ. 21,700 முதல் 69,100 வரை  வரை ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ’allowances’ வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின், திறனறிவுத் தேர்வு நடத்தபடும். மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.  எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உடல்தகுதித் தேர்வு (physical efficiency test):

CISF Recruitment 2024: +2 தேர்ச்சி போதும்; 1130 பணியிடங்கள்! சி.ஐ.எஸ்.எஃப்.-இல் பணி; விவரம்!

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:

உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் பொது அறிவு, ஆப்டிடியூட் கணிதம் உள்ளிட்டவைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். வினா தாள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CISF Recruitment 2024: +2 தேர்ச்சி போதும்; 1130 பணியிடங்கள்! சி.ஐ.எஸ்.எஃப்.-இல் பணி; விவரம்!

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே ரூ.100 -ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். மகளிர், முன்னாள் இராணுவ வீரர்கள், பழங்குடியின/பட்டியலின பிரிவினர் EWS-Economically Backward Class தகுதியுடையோர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? 

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான  http://www.cisfrectt.in என்ற லிங்கை கிளிக் செய்து தேவையான கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட  ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.  இந்தப் பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ .100 ஆகும். மேலும், பட்டியலின/ பழங்குடியினபிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2024 (23.00 மணி வரை)

இது தொடர்பாக கூடுதல் விவரங்கள், விண்ணப்ப படிவம் ஆகியவற்றை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://tamilanguide.in/wp-content/uploads/2024/08/CISF-Constable-Fire-Official-Notification-PDFs.pdf- என்ற லிங்கை கிளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget