பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? மீன்வளத்துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்!
மீன்வளத்துறையில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களுக்கு எழுத்துத்தேர்வு அல்லது திறனறித் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறையில் வலைப்பழுதுப் பார்ப்பவர் மற்றும் பிட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீன்வளத்துறை, மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக உணவு வழங்குவதில் முக்கியப்பங்காற்றிவருகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற மீனவப்பிரச்சனைகளை சரிசெய்து வருவதில் இந்த துறை முக்கியப்பங்காற்றிவருகிறது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் தற்போது மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ், சென்னை ராயப்புரத்தில் செயல்பட்டுவரும் சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம் அலுவலகத்தில் வலை பழுதுபார்ப்பவர் மற்றும் பிட்டர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இப்பணிக்கானத் தகுதி? சம்பள விபரம் குறித்தத் தகவல்களை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
மீன் வளத்துறையில் வலை பழுதுப்பார்ப்பவர் பணிக்கான தகுதிகள் :
மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மீன்பிடி வலைகளைத் தயாரித்தல் மற்றும் சரி செய்தல் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
வயது : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : ரூபாய் 5 ஆயிரத்து 200 முதல் 20 ஆயிரத்து 200 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மீன்வளத்துறையில் பிட்டர் பணிக்கானத் தகுதிகள்:
ஒரு பணியிடம் மட்டும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். பிட்டர் பிரிவில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
வயது : விண்ணப்பதார்கள் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம் – ரூபாய் 5 ஆயிரத்து 200 முதல் 20 ஆயிரத்து 200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், http://fsi.gov.in/LATEST-WB-SITE/fsi-main-pg-frm.htm என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பிரிண்ட அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து அஞ்சல் வழியாக நவம்பர் 6 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மண்டல இயக்குனர்,
சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம்,
மீன்பிடி துறைமுக வளாகம்,
இராயபுரம், சென்னை – 600013
தேர்வு செய்யும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களுக்கு எழுத்துத்தேர்வு அல்லது திறனறித் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.