Chennai Jobs: எம்.பி.பி.எஸ். படித்தவரா? மாதம் ரூ.90,000 ஊதியம்; விண்ணப்பிப்பது எப்படி? -முழு விவரம்!
Chennai Jobs: நகர்புற சுகாதார இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுகாதார மையங்களில் மருத்துவராக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் நகர்புற சுகாதார இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுகாதார மையங்களில் மருத்துவராக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
மகப்பேறு மருத்துவர் (Obstetrician/ Gynaecologist) : 12
குழந்தை நல மருத்துவர் ( Paediatrician) - 14
பொதுநல அறுவைச் சிகிச்சை மருத்துவர் (General Surgeon) : 14
மயக்க மருந்து நிபுணர் (Anaesthetist) : 8
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் (Orthopaedic Surgeon): 1
பல்நல மருத்துவர் (Dentist) : 1
மொத்த பணியிடங்கள் - 45
கல்வி மற்றும் பிற தகுதிகள்
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.டி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Obstetrician/ Gynaecologist, Paediatrician , General Surgeon, Anaesthetist, Orthopaedic Surgeon, Dentist ஆகிய துறைகளில் எம்.டி. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் -
- மகப்பேறு மருத்துவர் (Obstetrician/ Gynaecologist) - ரூ.90,000/-
- குழந்தை நல மருத்துவர் ( Paediatrician) - 14
- பொதுநல அறுவைச் சிகிச்சை மருத்துவர் (General Surgeon) - ரூ.90,000/-
- மயக்க மருந்து நிபுணர் (Anaesthetist) - ரூ.90,000/-
- எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் (Orthopaedic Surgeon) - ரூ.90,000/-
- பல்நல மருத்துவர் (Dentist) - ரூ.34,000/-
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
https://chennaicorporation.gov.in/gcc/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
The Member Secretary,
Chennai City Urban Health Mission,
Public Health Department,
Ripon Building, Chennai 600003.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.11.2023 மாலை 5 மணி வரை
வேலைவாய்ப்பு முகாம்
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம்
மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-24ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 3 சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் 19.8.2023, 28.10.2023 மற்றும் 23.12.2023 ஆகிய தேதிகளில் நடத்த ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் வேலை வாய்ப்பு முகாம் 19.8.2023 அன்று நடத்தி முடிக்கப்பட்டது. இதன் இரண்டாம் நிகழ்வாக வருகிற சனிக்கிழமை 28ம் தேதி விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை செஞ்சி அல்ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
150-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள்
இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப் பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியை உடையவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாமில் கலந்துகொள்ள முன்பதிவு
முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடுபவர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146 -226417), 9499055906 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.