மேலும் அறிய

Job Alert: ரூ.50,000 ஊதியம்; 8-வது தேர்ச்சி போதும்; ஊரக வளர்ச்சி துறையில் வேலை - முழு விவரம்!

Job Alert: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து விவரங்களை காணலாம்.

செங்கல்பட்டி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் காலியா உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

அலுவலக உதவியாளர் 

கல்வி மற்றும் பிற தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

01.07.2023-ன் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

இதற்கு அடிப்படை ஊதியமாக ரூ.15,700 வழங்கப்படும். சம்பள ஏற்றமுறையில் ரூ.50,000 வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை

  • சுயமுகவரியுடன் கூடிய ரூ.30/- அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை (10X4 Inches Poatal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.
  • தகுதியானவர்களுக்கு நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும். நேர்காணல் நடைபெறும் தேதி, இடம் பற்றி தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

ஆணையாளர் 

ஊராட்சி ஒன்றியம்

திருப்போரூர்.

விண்ணப்பிக்க கடைசி நாள் - 08.02.2024

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2024/01/2024011116.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

பெண்கள் பாதுகாப்பு மையத்தில் வேலை

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம்  வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

மூத்த ஆலோசகர் (Senior Counsellor)

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)

கல்வித் தகுதி

  • அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  • வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
  • சென்னையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  • பன்முக உதவியாளார் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமையல் தெரிந்திருக்க வேண்டும். 
  • 181 மற்றும் இதர உதவி  எண்கள் மூலம் வரும் தொடர்பான அழைப்பு உதவிகளுக்கு தேவை அறிந்து உதவும்  எண்ணம் கொண்டவராக வேண்டும்.
  • தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

மூத்த அலோசகர் - ரூ.20,000/-

பல்நோக்கு உதவியாளர் - ரூ.6,400/-

வயது வரம்பு:

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை,

இராஜாஜி சாலை,

சென்னை - 01 

oscnorthchennai@gmail.com

வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு  https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/01/2024010918.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.02.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனாAshwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget