மேலும் அறிய

CISF Recruitment 2023: +2 தேர்ச்சி போதும்; 215 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி - முழு விவரம்!

CISF Recruitment 2023: மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 215 பணியிட வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம்

மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை விளையாட்டுப் பிரிவு இடஒதுக்கீட்டின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய தொழிற்பாதுகாப்பு படை (Central Industrial Security Force) :

இந்தியாவின் முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை தான் மத்திய தொழிற்பாதுகாப்பு படை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், முன்னதாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2800 படை வீரர்களுடன், மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 1983ம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தும் உரிமை இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்றவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி விவரம்:

கான்ஸ்டபிள் (General Duty)

மொத்த பணியிடம் - 215

கல்வித் தகுதி

இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.  அதோடு, ஏதாவது ஒரு விளையாட்டில் மாநில /தேசிய/ சர்வதேச அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க  01.08.2023-ன் படி 18 வயது நிரம்பியவராகவும் 23 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

01/01/2021 to 28/11/2023 காலகட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு Pay Level-4 ரூ.25,500- ரூ.81,100/-

தேர்வு செய்யப்படும் முறை:

முதற்கட்டமாக Trial Test, Proficiency test, Physical Standard Test, மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டாவது கட்டமாக மருத்து பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே ரூ.100 -ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். மகளிர், முன்னாள் இராணுவ வீரர்கள், பழங்குடியின/பட்டியலின பிரிவினர் EWS-Economically Backward Class தகுதியுடையோர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? 

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான  http://www.cisfrectt.in  -என்ற லிங்கை கிளிக் செய்து தேவையான கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட  ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.  இந்தப் பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.11.2023 (23.00 மணி வரை)

இது தொடர்பாக கூடுதல் விவரங்கள், விண்ணப்ப படிவம் ஆகியவற்றை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://drive.google.com/file/d/1_Nna5KwBRfJSlOsxQZGAVKDnE7d_wpnN/view -என்ற இணைப்பை கிளிக் செய்து காணலாம்.

இந்த வேலைவாய்ப்பிற்கு வரும் 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
Embed widget