மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு: எப்படி விண்ணப்பிக்கலாம்? விவரம் இதோ!
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (Cnetral Industrial Security Force ) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 540 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுத்தப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள அலுவலகத்தில் பணி அமர்த்தப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
உதவி காவல் ஆய்வாளர்- (Assistant Sub Inspector (Stenographer))
தலைமை காவலர் (Head Constable (Ministerial) Post)
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற ஃபார்மெட்டில் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், இப்பணிக்கு கணினியில் நிமிடத்திற்கு 35 எழுத்து ஆங்கில் வார்த்தைகள் டைப் செய்யவும், ஹிந்தியில்ல் நிமிடத்திற்கு 30 எழுத்து டைப் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தப்பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பு சலுகைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருக்கும் தகவலில் தெரிந்துகொள்ளலாம்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Assistant Sub Inspector-Stenographer – (Pay Level-5) ரூ. 29,200 -92,300
- Head Constable-Ministerial – (Pay Level-4) ரூ. 25,500-81,100
எப்படி விண்ணப்பிக்கலாம்?
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Physical Standard Test (PST) & Documentation, Written Examination under OMR/Computer Based Test(CBT), Skill Test & Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் தவிர மற்றவர்களுக்கு ரூ.100 விண்ணப்ப கட்டணமாக அறிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-10.2022
அறிவிப்பின் முழு விவரத்திற்கு என்ற https://www.cisfrectt.in/file_open.php?fnm=kIf2OepD0Hguaqa4pLFJcTlMZtyZTSCRW7ioJHCM2P3x0Emiikg3ofGpV5kApc3K5eMB3FoDQDgu4_jkyHolYc5fr6NHiUsJ57DKaFji7YVer32TwfmxZvlLsEc6mrbt என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) என்பது இந்தியாவின் மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றாகும். சிஐஎஸ்எஃப் என்பது இந்தியாவின் துணை ராணுவப் படைகளில் ஒரு தனித்துவமான அமைப்பாகும். 356 க்கும் மேற்பட்ட தொழில்துறை அலகுகள், அரசாங்க உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் இந்தியா முழுவதும் அமைந்துள்ள வசதிகள் மற்றும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் உள்ளது. அணு மின் நிலையங்கள், விண்வெளி நிறுவல்கள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள், பெரிய துறைமுகங்கள், கனரக பொறியியல், எஃகு ஆலைகள், தடுப்பணைகள், உர அலகுகள், விமான நிலையங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான மற்றும் கட்டுப்படுத்தப்படும் நீர் மின்/அனல் மின் நிலையங்கள், கரன்சி நோட் பிரஸ் ஆகியவை அடங்கும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்- https://www.cisfrectt.in/