Anna University Recruitment : அண்ணா பல்கலைக்கழக்கத்தில் பணி காத்திருக்கிறது: 5ஆம் தேதி கடைசி - முழு விவரம் இதோ!
Anna University Recruitment 2022 : அண்ணா பல்கலைக்கழத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
அண்ணா பல்கலைக்கத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் (Centre for Climate change and Disaster management) தொடங்கப்பட்டுள்ள திட்டத்தில் பணிபுரிவதற்கான Project Scientist, Project Associate தற்காலிக பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 5 - ஆம் தேதி கடைசி நாள். இந்த திட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் பணி புரியலாம்.
பணி விவரம்:
Project Scientist -Coastal Ecosystem
Project Scientist -Urban Habitat
Project Scientist-Geospatial Technology
Project Associate II -Urban Habitat
Project Associate II -Geospatial Technology.
Project Associate
பல்கலைக்கழக பணிக்கான கல்வித் தகுதி:
Project Scientist பணிக்கு பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட துறைகளில் சம்பந்தப்பட்ட துறையில் Ph.D அல்லது M.E/M.Tech/M.Sc ஆகியவை படித்திருக்க வேண்டும். நான்காண்டுகள் ஆய்வு படிப்பு முடித்திருக்க வேண்டும்.
Project Associate II பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் M.E , M.Tech, M.Sc ஏதாவது ஒரு முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Assistant பணிக்கு B.Com அல்லது BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப் செய்யவும், டேட்டா என்ரி செய்வதிலும் புலமை பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Project Scientist - ரூ.60,000
Project Associate II - ரூ.50,000
Project Assistant - ரூ.15,000
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொண்டு பூர்த்தி செய்து தபால் மூலம் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தேவையாக நகல்களுடன் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு குறித்த முழு விவரத்திற்கு https://www.annauniv.edu/pdf/Recruitment_Project%20Scientist_27102022.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கூகுள் படிவம் - https://docs.google.com/forms/d/e/1FAIpQLSffFBE6l1k0ERXI1Cd8mgbXrk9ePI6OILKDEPCe6COLAo62MA/viewform
முகவரி :
The Director,
Centre for Climate Change and Disaster Management,
Anna University, Chennai - 600 025.