Anna University Recruitment : மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம்: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி; முழு விவரம்!
Anna University Recruitment : அண்ணா பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த விவரம்!
Anna University Recruitment :
அண்ணா பல்கலைக்கழகத்தின் (Anna University) 'Internal quality assurance cell' பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திட்டப்பணி மேலாளர் பணியிடத்திற்கு தேவையான தகுதிகள் பற்றி கீழே காணலாம்.
அண்ணா பல்கலைக்கழத்தில் உள்ள வேலைவாய்ப்பின் விவரம்:
பணி விவரம்:
திட்டப்பணி மேலாளர் -II (Project
Associate-II) - 2
திட்டப்பணி மேலாளர் (Project
Associate-I) - 4
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (B.E.,அல்லது B.Tech) அல்லது MCA படித்திருக்க வேண்டும்.
ஏதாவது ஒரு துறையில் முதுகலை படிப்பு M.E., M.Tech, அல்லது MBA ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
திட்டப்பணி மேலாளர் -II பணிக்கு விண்ணப்பிக்க தரவுகளை பகுப்பாய்வு செய்யும் துறையில் குறைந்தது பத்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு வயது வரம்பு குறித்து எந்த விவரங்களுக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
ஊதிய விவரம்:
திட்டப்பணி மேலாளர் II - ரூ. 50,000
திட்டப்பணி மேலாளர் I - ரூ. 25,000 முதல் ரூ.35,000 வரை
எப்படி விண்ணப்பிப்பது?
அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதோடு தேவையான கல்வி சான்றிதழ் உள்ளிட்டவைகளின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் அனுப்பும்போது, அஞ்சல் உறையின் மீது ‘ Application for the post of “Project Associate-I / Project Associate-II”
என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director
Internal Quality Assurance Cell
CPDE Building 1st Floor
Anna University, Chennai – 600025
தொடர்ப்புக்கு
எண்: 044- 2235 8585/79/80/81,
இ.மெயில்- iqac@annauniv.edu, annaiqac@gmail.com
விண்ணப்ப படிவம்: https://www.annauniv.edu/pdf/Project%20Associate-I%20&%20II_Temporary%20Recruitment_IQAC_Last%20Date_19.12.2022.pdf என்ற லிங்கி மூலம் டவுன்லோடு செய்யவும்.
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://www.annauniv.edu/pdf/Project%20Associate-I%20&%20II_Temporary%20Recruitment_IQAC_Last%20Date_19.12.2022.pdf'என்ற லிங்க் மூலம் காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.12.2022
இது ஒப்பந்தம் அடிப்படையிலான வேலைவாய்ப்பு மட்டுமே என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க,,